நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அபராதம் விதித்த போலீசார்.. எதற்கு தெரியுமா...?
வாகனங்களுக்குள் நடக்கும் குற்றங்களை குறைக்க, கண்ணாடி மற்றும் சன் ஃபிலிம்களை பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன் சமீபத்தில் பான்-இந்தியன் படமான புஷ்பாவில் நடித்து அசத்தியிருந்தார். சுகுமார் இயக்கிய இதில், நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார். ஃபஹத் பாசில் டோலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ப்ரீ புரொடக்ஷன் கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில், பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தியுள்ளார். அல்லு அர்ஜுன் தனது ரேஞ்ச் ரோவர் எஸ்யூவியில் டின்ட் செய்யப்பட்ட ஜன்னல் ஷீல்டுகளைப் பயன்படுத்தியதற்காக அவருக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது. அதற்காக வருக்கு ஒரு சலான் வழங்கப்பட்டது. அவரைத் தவிர, தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுக்கும் இரு தினங்களுக்கும் முன் அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களுக்குள் நடக்கும் குற்றங்களை குறைக்க, கண்ணாடி மற்றும் சன் ஃபிலிம்களை பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரிவிக்ரமின் வாகனம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் நிறுத்தப்பட்டது. போலீசார் டின்ட் செய்யப்பட்ட ஜன்னல் ஷீல்டுகளை கண்டு அபராதம் விதித்தனர். அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், இதற்காக ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் ஜூனியர் என்டிஆர், கல்யாண் ராம் மற்றும் மஞ்சு மனோஜ் ஆகியோரின் வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர்.
Shivani Dance Video: ஜாலியோ ஜிம்கானா..! குத்தாட்டம் போட்ட ஷிவானி...! வைரல் வீடியோ..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்