Nikki Galrani : மக்கள் அன்பா இருக்காங்க.. எங்க கல்யாணம் இப்படிதான் நடக்கப்போகுது.. நிக்கி - ஆதி அப்டேட்ஸ்..
டைப்காஸ்ட் அல்லது பாலின சவால்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறது. ஆனால் தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதாக உணர்கிறேன் என்கிறார் நிக்கி.
தென்னிந்திய சினிமாவின் லக்கி சார்ம் என இயக்குநர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழில் டார்லிங் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். முதல் படமே பேய் படமாகவும் , பேயாகவும் நடிக்க ஒரு நடிகை ஒப்புக்கொள்வது கடினம்தான் என்றாலும் கூட தனக்கு ரிஸ்க் எடுக்க ரொம்ப பிடிக்கும் , சேலஞ்சிங்கான கதாபாத்திரங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும் என்பதால்தான் பச்சை கொடி காட்டியதாக கூறுகிறார் நிக்கி கல்ராணி.
மேலும் பிங் வில்லா இணையதள உரையாடலில் பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை, பேயாக நடித்தால் என் கெரியருக்கு டேஞ்சர் ஒன்றும் இல்லை. நான் நடிப்பதற்கும் எனது திறமையை வெளிப்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றுதான் நினைக்கிறேன் . என்னைப் பொறுத்தவரை நான் கவர்ச்சியாகத் தோன்றுவது மட்டுமல்ல, நடிப்பை வெளிப்படுத்துவதும் எனக்கு முக்கியம் அதை நோக்கிய எனது அணுகுமுறைதான் முதல் படம் ” என்றார்.
View this post on Instagram
நிக்கி சமீபத்தில் வெளியான இடியட் படத்திலும் அவர் இதேபோன்ற பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது எவ்வளவு சவாலானது என்று கேட்டதற்கு, "சில இடங்களில் நான் பேயாக வருகிறேன் . பேயாக நடிப்பது வழக்கமாக நடிப்பதை விட சற்று சோர்வடைய செய்கிறது . காரணம் அதற்கான மெனக்கெடல்கள் மற்றும் மேக்கப் அதிகம் “ என்றார். மேலும் நான் வட இந்திய பெண்ணாக இருந்தாலும் பெங்களூரில்தான் வளர்ந்தேன். அதனால் எனக்கு தென்னிந்திய மொழி பேசும் நண்பர்கள் அதிகம் . அதனால் நான் எளிமையாக தென்னிந்திய மொழிகளை கற்றுக்கொண்டேன். டைப்காஸ்ட் அல்லது பாலின சவால்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறது. ஆனால் தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதாக உணர்கிறேன்" என்கிறார் நிக்கி.
View this post on Instagram
நிக்கி கல்ராணியும் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகரான ஆதியும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அந்த சமயத்தில் வெளியான புகைப்படங்கள் பலருக்கும் ஷாக்கிங் சர்ப்ரைஸாக இருந்தது. இது குறித்து பகிர்ந்த நிக்கி "திருமணம் என்பது ஒரு அழகான உணர்வு. மக்கள் என்னிடமும் ஆதியிடமும் அன்பாக இருப்பதை நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். மிக விரைவில் திருமணம் நடக்க உள்ளது. அதுகுறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம் “என்றார்.