மேலும் அறிய

'விருமாண்டிக்காக விஜயகாந்த் படம் பார்த்தேன்.. இது கமல்சார் ஐடியா' - அபிராமி பகிர்ந்த நினைவுகள்!

செகண்ட் இன்னிங்ஸ் பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்கள் கல்யாணம் செய்தாலும் இல்லைனாலும் ஒரே இன்னிங்ஸாதான் ஓடிட்டு இருக்கு.

கொஞ்சம் ஸ்வீட், நிறையவே இண்டலிஜெண்ட்..நிறைய நிறைய அழகு..இதுதான் நடிகர் அபிராமி. மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பட்டெனப் பேசுகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியிலிருந்து...
”ரொம்ப நாள் கழிச்சு ஒரு நடிகர் ப்ரேக் எடுத்துட்டு நடிக்க வந்தால் செகண்ட் இன்னிங்ஸ் என்று சொல்லறாங்க. எனக்கே இதுவரை நாலு முறை கம்பேக் கொடுத்துட்டாங்க.

செகண்ட் இன்னிங்ஸ் பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்கள் கல்யாணம் செய்தாலும் இல்லைனாலும் ஒரே இன்னிங்ஸாதான் ஓடிட்டு இருக்கு. இருந்தாலும் பெண்கள் தொடர்ச்சியா சினிமாவில் ஆக்டிவ்வாக வைத்திருக்கறதால அதனை வரவேற்கலாம். பெர்சனல பக்கத்தைப் பொருத்தவரை என் கணவர் எனக்கு நல்ல நண்பர் 14 வயது தொடங்கி இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும். ஆனால் சினிமா அவருக்கு தொடர்பு கிடையாது. சினிமா பற்றி எதுவுமே தெரியாது. வெரி க்யூட் பெர்ஸன்.  என்னுடைய பேட்டிகள் எல்லாம் பார்த்துட்டு நிறைய அட்வைஸ் அவருடைய பார்வையில் இருந்து கொடுப்பார்.

View this post on Instagram
 
A post shared by Abhirami (@abhiramiact)

நான் கதை கேட்கும்போது அதை பற்றி அவருடைய பார்வையில் ஒரு கருத்து இருக்கும். அது ஒரு அருமையான உறவா இருக்கு. ஒரே துறையில் இருக்கறவருடன் வாழ்ந்தால் அது ஒரு பப்பிளில் வாழ்வது போலதான் இருக்கும். ஆனால் இது சுவாரஸ்யமாக இருக்கு” என்னும் அபிராமிக்கு  நாலு கால் மகள் இருக்காங்களாம். பெயர் மேங்கோ என்கிறார். 

தன்னை அதிதீவிர கமல் ரசிகை என தான் பேட்டியளிக்கும் அத்தனை இடத்திலும் தவறாமல் பதிவு செய்கிறார்.  விருமாண்டி படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்த அவர்,”எனக்கு மொழிகள் அதில் இருக்கற நுணுக்கங்கள் ரொம்ப பிடிக்கும். அதனாலேயே என்னுடைய படங்களில் பகுதிக்கு ஏற்ற மாதிரியான தமிழைப் பேசுவது பிடித்திருந்தது. ஒருவர் பேசுவதை உற்று கேட்டு அதை மிமிக் செய்ய தொடங்கிடுவேன். விருமாண்டி படத்தில் நடிச்சது அப்படித்தான். என்னுடன் இருந்த மற்ற நடிகர்கள் எல்லோருமே மதுரையை சேர்ந்தவர்கள். மேலும் கமல் சாரும் ஒருபக்கம் பயிற்சி கொடுத்தார். ‘கேப்டன் படங்களைப் பாருங்க, அதுல அவர் எப்படிப் பேசுறாரோ அதை ஃபாலோ செய்துக்கங்க’ என்று சொன்னார். அதனாலேயே ஹோம் வொர்க்காக விஜயகாந்த் படங்களை பார்த்தேன்” என்கிறார்.

கூடுதலாக அண்மையில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தைப் பார்த்திருக்கிறார், “நான் கமல் சாருடைய பெரிய ஃபேன். விக்ரம் படம் தவறாம பார்த்தேன். ’ஒன்ஸ் அபான் ஏ டைம்..’ பின்னணியில் ஒலிக்க அவர் ஸ்க்ரீனில் தோன்றும்போது அப்படி இருந்தது” என்கிறார் கண்கள் விரிய..  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget