மேலும் அறிய
Advertisement
Leo Movie: லியோ ரிலீஸ்.. தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை.. மதுரை ஆட்சியர் எச்சரிக்கை..!
லியோ திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் 9994909000 என்ற செல்லும் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
” லியோ திரைப்படம் தியேட்டர்களில் அரசு நிர்ணயத்ததை விட டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணம் கூடுதலாக வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை , விதிமீறல்கள் தொடர்பான புகார் எண்ணை அறிவித்து - மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி - மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள லியோ படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். வரும் 19ம் தேதி லியோ படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சென்னை மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியானது 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடத்த அரசாணை வெளியிடப்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Leo Vijay: இடது கை பழக்கம் கொண்டவரா லியோ... ரிலீசுக்கு முன்னாடியே படத்தின் ட்விஸ்ட்டை கண்டுபிடித்த ரசிகர்கள்!
இந்நிலையில் லியோ திரைப்படம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் :
மதுரை மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்பட்ட 6 நாட்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது எனவும், திரைப்படத்தை மேற்கண்ட தினங்களில் தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 01.30 மணிக்கும்{ 5-காட்சிகள்) முடிவடையும் வகையில் திரைப்படம் திரையிட வேண்டும் எனவும், இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் இதற்கான சிறப்பு கண்காணிப்பு குழு திரையரங்குகளை கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும், மேலும் பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சரியான பாதை, வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட வேண்டும் எனவும், அரசு நிர்ணயம் செய்துள்ள திரையரங்க டிக்கெட் கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டும் எனவும், லியோ திரைப்படம் வெளியாகும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் தமிழ்நாடு திரையரங்குகள் (ஓழுங்குமுறை) சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறுப்பிட்டுள்ளார். மேலும் லியோ திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் 9994909000 என்ற செல்லும் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion