ஆர்த்திக்கு பணம் தான் டார்க்கெட்டா? ரவி மோகன் சொன்னது உண்மை தான் போல – ஆர்த்தியை விளாசும் நெட்டிசன்கள்!
ரவி மோகனிடமிருந்து ஜீவனாம்சமாக மாதம் மாதம் ரூ.40 லட்சம் கேட்ட நிலையில், ஆர்த்திக்கு ஆதரவாக பேசியவர்கள் இப்போது அவரை விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு தான். இவர்களை பற்றி நாளுக்கு நாள் பரபரப்பாகவும், சுவாரஸ்யமான விஷயங்களும் வெளியாகி வருகிறது. தனது மனைவியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்த நிலையில், அதற்கு கெனிஷா தான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விவாகரத்து கோரி ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு தங்களது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தான், ரவி மோகன் தன்னை ஆர்த்தி குடும்பம் பொன் முட்டையிடும் வாத்தாகவே பார்த்ததாக கூறி ஆதங்கத்தை கொட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்த்தியின் அம்மாவும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் மற்றும் ஆர்த்தி தரப்பில் இருந்து மாறி மாறி அறிக்கை வெளியிடப்பட்டது.

குறிப்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், "தனது சொத்துகளை, கௌரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை. நன்றாக முன் கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள Range Rover காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும், மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார்.
உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி "தொலைத்த பெற்றோர்கள்"என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
துன்புறுத்தப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகார் கூறுகிறார், அப்படியானால், ஏன் இத்தனை ஆண்டுகள் வரை காத்திருந்தார்? ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளைக் கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்? அவருக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்துவிட்டு தனது குட்டு வெளிப்பட்டு தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில் தான் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதன் காரணம் பயம் அல்ல அதற்கு மேல் அவருடைய ரகசிய வாழ்வைக் காப்பாற்ற முடியாமல் போனதே. என காரம் சாரமாக விளாசி இருந்தார்.

மேலும் 15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எனது சொந்த கனவுகள், லண்டனில் பெற்ற முதுகலைப் பட்டம், லட்சியம் என அனைத்தையும் துறந்துவிட்டு வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி மீறப்பட்டது. அவருக்காக வாழாமல் எனக்காகவும் என் லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்திருந்தால், என் சொந்த அடையாளத்தில் இதைவிட இருமடங்கு வசதியான, உயர்வான ஒரு வாழ்கையை நான் வாழ்ந்திருப்பேன். ஆனால் காதலின் பேரில் நம்பிக்கையின் பேரில் வாழ்ந்துவிட்டேன். நாங்கள் இதுவரை எடுத்த அனைத்து பொருளாதார முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவைகளே. அதன் எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அவை முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறி இருந்தார்.
ஆர்த்தி இன்னும் பல விஷயங்களை கூறி வெளியிட்ட இந்த 4 பக்க அறிக்கைக்கு பின்னர் பலர் ரவி மோகனுக்கு எதிராக திரும்பிய நிலையில், இன்று ஆர்த்தி தரப்பில் இருந்து குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து ஜூன் 12 ஆம் தேதிக்குள்ளாக ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரவி மோகன் கெனிஷாவுடன் ஏற்பட்ட தொடர்புக்கு பின்னர் ஆர்த்தியை விவாகரத்து செய்கிறார் என ஆர்த்திக்கு ஆதரவாக ரசிகர்களும், நெட்டிசன்களும், பிரபலங்களும் குரல் கொடுத்த நிலையில் இப்போது அவர் ரூ.40 லட்சம் கேட்டதைத் தொடர்ந்து அவருக்கு பணம் தான் முக்கியம் என்பதை ஆர்த்தியின் இந்த மனு காட்டுவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஆர்த்தியின் இந்த மனுவுக்கு ரவி தரப்பில் என்ன பதிலளிக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.





















