Nazriya Nazim: நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்த ஆடுகளம் நரேன்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
நையாண்டி படத்தின்போது தான் தன்னை அறியாமல் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்ததாக ஆடுகளம் நரேன் தெரிவித்துள்ளார்.
ஆடுகளம் நரேன்
1997 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கிய ராமன் அப்துல்லா இயக்கத்தில் நடிகராக அறிமுகமானவர் நரேன் என்கிற நாராயணன். ஜூலி கணபதி , தாயின் மணிக்கொடி , அஞ்சாதே , அறை எண் 305 இல் கடவுள் , யுத்தம் செய் , மனம் கொத்தி பறவை , அஞ்சாதே , ஆடுகளம் , பேட்ட , பீட்சா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். கொடூரமான வில்லன் , பாசக்காரத் தந்தை , காமெடி என எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் வித்தியாசம் காட்டி நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த காரணத்தால் நாராயணன் என்கிற இவரது பெயர் ஆடுகளம் நரேன் என்று மாறியது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்து இறந்தபின் அவருக்கு பதிலாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடிக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பரவலாக கோரிக்கை எழுந்தது குறிப்பிடத் தக்கது.
நஸ்ரியாவுக்கு முத்தம்
சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடித்த நையாண்டி படத்தில் நஸ்ரியாவுக்கு அப்பாவாக நடித்தார் நரேன். நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய நஸ்ரியா ராஜா ராணி படத்தின் மூலம் கவனம் பெற்றார். அடுத்தடுத்து தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு வரத்தொடங்கிய போதும் கிளாமர் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். நையாண்டி படத்தில் தனது ஒப்புதல் பெறாமல் ஒரு சில காட்சிகளை படத்தில் வைத்ததற்காக வழக்குத் தொடர்ந்தார் நஸ்ரியா.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நையாண்டி படத்தின் போது நிகழ்ந்த நிகழ்வு ஒன்றை நரேன் பகிர்ந்துகொண்டார். "ஒரு காட்சியில் நஸ்ரியாவிடம் நான் பாசமாக பேசிவிட்டு செல்லவேண்டும். இயக்குநர் என்னிடம் அப்டியே எமொஷனலான ரியாக்ஷன் மட்டும் கொடுக்கச் சொன்னார். ஆனால் நான் பேசிக்கொண்டே ஒரு அவசரத்தில் நஸ்ரியாவின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டேன். அந்த ஷாட் முடிந்ததும் செட்டில் இருந்த எல்லாரும் கைதட்டி பாராட்டினார்கள்.
நான் சென்று அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்ததற்கு அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன் . நஸ்ரியா செட்டில் இருந்த தனது தந்தையை அழைத்து வந்து இது என்னுடைய ரியல் அப்பா நீங்க என்னுடைய ரீல் அப்பா. தான் தப்பாக எதுவும் நினைத்துக் கொள்ளவில்லை என்று சொன்னார். அந்த படத்தில் எங்களுக்கு இடையில் நல்ல நட்பு உருவானது. அந்த படத்திற்கு பிறகு அவரை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. " என்று ஆடுகளம் நரேன் சொன்னார்.