இப்படி ஒரு திறமையா? இனிய குரலில் பாடிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.. ஒரு ஃப்ளாஷ்பேக் பேட்டி
ஜெயலலிதா ஒரு நல்ல நடிகர், தேர்ந்த அரசியல்வாதி, தமிழகத்தின் முதல்வராக 6 முறை இருந்தவர்..
ஜெயலலிதா ஒரு நல்ல நடிகர், தேர்ந்த அரசியல்வாதி, தமிழகத்தின் முதல்வராக 6 முறை இருந்தவர்.. இவை மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால் அதையும் தாண்டி அவரிடம் பல்வேறு திறமைகளும் இருந்தன. அதில் ஒன்று பாடும் திறன். ஜெயலலிதா நல்ல பாடகி. 'அடிமைப் பெண்' படத்தில், 'அம்மா என்றால் அன்பு' என்று எம்.ஜி.ஆருக்குத் தாலாட்டுப் பாடிய குரல், இவருடையதே.
இந்தியில் 'சோரி சோரி' படத்தின் 'ஆஜா சனம் மதுர் சாந்தினி மே ஹம்' பாடல் ஜெயாவுக்கு பிடித்த பாடல். ஓய்வு நேரங்களில் இருக்கும் போது எப்போதும் இதையே முணுமுணுப்பார். இதை அவரே கூறியிருக்கிறார். தமிழகத்தில் கொடி கட்டி பறந்த ஜெயலலிதா, இந்தியில் இஸ்ஸாத் என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக தர்மேந்திரா நடித்திருந்தார். அந்த படத்தில் மொத்தம்7 பாடல்கள் இதில் 4 பாடல்களை லதா மங்கேஷ்கர் ஜெயலலிதாவுக்காக சோலோவாக பாடி இருப்பார். இதில் அனைததுப் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.
கவனம் ஈர்க்கும் சிமி கரேவால் பேட்டி..
ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்தார். அவர் சிமி கரேவலுக்கு 1999-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில் தம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்திருப்பார். அவர் மறைவுக்குப் பின்னர் அந்த வீடியோ மிகவும் பிரபலமானது.
அதில் சிமி, ஜெயலலிதாவிடம் இளம் வயது ஆசைகள் குறித்து கேட்டிருப்பார். அப்போது அவர் நான் நாரி கான்ட்ராக்டர் கிரிக்கெட்டர் மீது க்ரஷ் கொண்டிருந்தேன். அவரைப் பார்ப்பதற்காகவே அவர் விளையாடும் டெஸ்ட் அரங்குகளுக்குச் செல்வேன்.
பின்னாளில் நடிகர் ஷமி கபூர் மீது மிகப்பெரிய க்ர்ஷ் உருவானது என்பார். இன்றளவு எனது ஃபேவரைட் படம் ஜங்ளீ. அதில் வரும் யாஹூ பாடல் எனக்கு ரொமப்ப் பிடிக்கும் என்பார்.
அடுத்து அவருக்குப் பிடித்த சினிமா பாடல்கள் பற்றி சிமி கேள்வி எழுப்புவார். அதற்கு ஜெயலலிதா ஒரே ஒரு பாடலை மட்டும் குறிப்பிட முடியாது. நிறைய பாடல்கள் இருக்கின்றன என்பார். தோ ஆங்கே பாரஹாத் படத்திலிருந்து ஏ மாலிக் பாடலை முதலில் பட்டியலிடுவார். உடனே சிமி அதைப் பாட முடியுமா எனக் கேட்க இல்லை எனக்கு பழக்கம்போய்விட்டது எனப் பதிலளிப்பார் ஜெயலலிதா. பின்னர் சோரிசோரி படத்தின் 'ஆஜா சனம் மதுர் சாந்தினி மே ஹம்' பாடல் ரொம்பவே பிடிக்கும் என்றவுடன் சிமி இதையாவது பாடுங்கள். ஒரு வரி பாடுங்கள் கூடவே நானும் பாடுகிறேன் எனக் கேட்பார். உடனே ஜெயலலிதா புன்னகையுடன் அந்தப் பாடலைப் பாடுவார். ஒரு வரிக்குத் தயங்கிய அவர் பின்னர் பாடலில் சிலபல வரிகளை ஆர்வத்துடன் உற்சாகத்துடன் பாடுவார்.
அந்த வீடியோவைக் காண: