
A.R. Rahman: ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்த புரியாத புதிர்... விடை என்ன?
A.R. Rahman: ஏ.ஆர்.ரஹ்மானுக்கென்று ஒரு தனி ஸ்டைலிஸ்டிக் மியூசிக் இருக்கிறது. பல்வேறு இசை பாணியில் வல்லவர். இசை புயல் இந்திய படங்கள் மட்டுமின்றி சர்வதேச படங்களிலும் இசையால் உலகளவில் பிரபலம் அடைந்தவர்.

A.R. Rahman : அசத்தலான 3D வீடியோ என்ன சொல்கிறது... இசை புயல் வைத்த சஸ்பென்ஸ்
இசை பிரியர்கள் அனைவரின் உயிர் நாடி இசையமைப்பாளர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். அவரின் இசையில் மயங்காதவர் என எவரும் உண்டோ. பன்முக திறமைகளை கொண்ட மாபெரும் இசை கலைஞன், பத்ம பூஷன் விருது வித்தகருமான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது அடுத்தகட்ட திட்டம் குறித்து இவ்வுலகையே யூகிக்கவைத்தவர்.
உலகெங்கிலும் பல சாதனைகளை படைத்து அனைவரின் இதயங்களை வென்றவர் வித்தகர். தற்போது அவருக்கு பிடித்தமான ஒரு சிறப்பான திட்டத்தை தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உள்ளார். அதற்கான பணிகளை மிகவும் அமைதியாக நகர்த்தி வருகிறார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
ரசிகர்களை யூகிக்க என்னவாக இருக்கும் :
சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்திற்கு அழைத்து சென்று நம்மை பிரமிக்க வைத்து விட்டார். ஒரு மியூசிக்கல் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதற்கு "புல் அப், லைட் அப், ஸ்பீட் அப்! வாட்ச் திஸ் ஸ்பேஸ்" என்ற தலைப்புடன் ட்வீட் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இந்த வித்தியாசமான ட்வீட் அவரின் ரசிகர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது. இந்த விடியோவை பார்க்கையில் இது அவரது அடுத்த இசை திட்டம் குறித்த அப்டேட் ஆக இருக்கலாம் அல்லது அவர் அமைதியாக நடத்தி வந்த அந்த ஸ்பெஷல் திட்டமாக இருக்கலாம். எனினும் இதில் ஏராளமான மியூசிக் கருவிகள் இருப்பதால் அது நிச்சயமாக ஒரு சுவாரஸ்யமான ட்ரீட்டாக தான் இருக்கும். "கற்பனை - புதுமை" என்று 3D வடிவில் சுழலும் ஹெஸ்சகன் உள்ளே மூளை இருப்பது நம்மை யூகத்தில் திகைக்கவைக்கிறது.
Get intrigued 😊 pic.twitter.com/rB5G7WGmRM
— A.R.Rahman (@arrahman) August 18, 2022
சகலகலா வித்தகர்:
ஏ. ஆர். ரஹ்மானுக்கென்று ஒரு தனி ஸ்டைலிஸ்டிக் மியூசிக் இருக்கிறது. பல்வேறு இசை பாணியில் அமைக்க கூடிய வல்லவர் என அறியப்பட்ட இசை புயல் இந்திய படங்கள் மட்டுமின்றி சர்வதேச படங்களிலும் தனது இசையால் உலகளவில் பிரபலம் அடைந்தவர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் "பொன்னியின் செல்வன்", "வெந்து தணிந்தது காடு", "கோப்ரா" உள்ளிட்ட திரைப்படங்களுக்காக மிகவும் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.
எண்ணில் அடங்கா விருதுகள்:
இதுவரையில் ஏ. ஆர். ரஹ்மான் ஆறு தேசிய விருதுகள், இரண்டு கிராமிய விருதுகள், இரண்டு அகாடமி விருதுகள், ஒரு பாஃப்டா, ஒரு கோல்டன் குளோப் மற்றும் பல விருதுகளை வாரி குவித்தவர். இந்த இசை புயல் வாழ்வில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் மெம்மேலும் பெருக வேண்டும்.
Love and more love 💙💛🧡💚EPI https://t.co/cmOZONhyh6
— A.R.Rahman (@arrahman) August 16, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

