29YearsOfAjithism: டிவிட்டரில் களைகட்டும் அஜித்திஸம்! -29 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாட தயாராகும் ‛தல’ படை!
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் மட்டுமல்லாது திரை பிரபலங்களாலும் கொண்டாடப்படும் நடிகர். ‘தல’ என அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார்தான் தற்போதை ட்விட்டர் டாக். #AjithismTrendOnAug2 என்ற ஹேஷ்டேக் தீயாக பரவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 28 ஆண்டுகால திரைப்பயணத்தை அஜித் கடந்த விதமாக , அவரது ரசிகர்கள் காமன் டிபி உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு டிவிட்டரில் பட்டையை கிளப்பினார்கள். வித்யூ ராமன், நந்திதா ஸ்வேதா, ஆரத்தி, டிடி, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, ராகுல் தேவ், இயக்குனர் மோகன் ஜி , பிரசன்னா, எடிட்டர் ரூபன், விக்னேஷ் சிவன், மகத், பிரேம்ஜி, சாம் சி எஸ், பார்வதி நாயர்,கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் என பதினாறு பிரபலங்கள் மூலமாக கடந்த ஆண்டு காமன் டிபியை ரசிகர்கள் வெளியிட்டனர்.அப்போது #28YearsOfAjithism என்ற டேக் லைனும் அப்போது வைரலானது. இந்த நிலையில் மீண்டும் 29 வருடன் அஜித்தின் திரைப்பயண கொண்டாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் அவரது ரசிகர்கள். அதற்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ கிட்டத்தட்ட 300k பார்வையாளர்களை நெருங்கிவிட்டது.
FINALLY !🥳,
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) July 28, 2021
The Most AWAITED Anniversary Tag ANNOUNCEMENT Of Our ThalaAJITH For Completing A SUPREME 29 Years of EXCELLENCE In Cinema Industry Is Here🎉
Full Details Regarding Anniversary Events Will Be Announced This WEEKEND😎💯,
Get READY🕺💥#AjithismTrendOnAug2 #Valimai pic.twitter.com/vaodKmQMsL
இது குறித்து ’தல ஃபேன்ஸ் கம்யூனிட்டி’ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் “ சினிமா துறையில் சுப்ரீம் வருடமான 29 ஆண்டுகளை கடந்திருக்கும் நம்ம தலையில் கொண்டாட்ட அறிவிப்புகள் இந்த வார இறுதியில் வெளியாகும். கடந்த ஆண்டு நாம் பதிவி செய்த ரெக்கார்டை நாமே முறியடிப்போம் ,தயாராக இருங்கள்“ என குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவில் ஆகஸ்ட் 2 முதல் அஜித்தின் 29 ஆண்டுகால சினிமா பயண கொண்டாட்டங்கள் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது #AjithismTrendOnAug2 #Valimai இரண்டு ஹேஷ்டேகும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
#Valimai Motion poster still trending in No.1 🔥 with 1Cr Views #ValimaiMotionPoster
— KOLKATA AJITH FC (@KolkataAjithFC) July 29, 2021
Biggest Anticipated film in India in the lines of big budget #Kgf2 #RRR #PonniyinSelvan ..#Thala #Ajith #AjithKumar #ThalaAjith #HVinoth pic.twitter.com/5Yfpu4DCmx
அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இளம் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. இதில் மோஷன் போஸ்டர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது. நீண்ட காலமாக வலிமை அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு விருந்தாக அமைந்தது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த போஸ்டர் , வெளியீட்டு தேதியுடன் ஷேர் செய்யப்படலாம் என ஒரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிமை படத்தில் அஜித் சிபிசிஐடியாக நடித்துள்ளார். படத்தில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் சுவாரஸ்ய சண்டைக்காட்சிகள் ஒன்றும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.