Survivor Tamil : தோத்துட்டீங்கன்னா அவ்ளோதான்னு சொல்றாரு அர்ஜுன்.. காலையிலேயே ஒரு சுறுசுறு Promo..
வெளியேற்றப்பட்ட இருவரும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று நினைக்கப்பட்ட நிலையில், அவர்கள் வேறு ஒரு தீவில் விடப்பட்டனர்.
காலையிலேயே போஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது சர்வைவர் ப்ரோமோ 1. நேற்று இந்திஜாவும், ஸ்ருஷ்டியும் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள் என எல்லாரும் எதிர்பார்த்திருந்த வேளையில், அவர்கள் வேறு ஒரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ப்ரோமோ விறுவிறு காட்சிகளில்,Immunity Challenge வைக்கிறார் அர்ஜுன். ஒரு கட்டையில் 7 பேர் நிற்கும்போது, ஒருவர் மட்டும் எதிர்ப்பக்கம் நகரும் சேலஞ்ஜ். தவறி தண்ணீருக்குள் விழுவது, தவழ்ந்து போவது என எல்லா சர்வைவர்களும் போராடுகிறார்கள்.
View this post on Instagram
ஜீ தமிழ் சேனலில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியின் ஐந்தாம் நாள் எபிசோட் நேற்று ஒளிப்பரப்பானது. ஆர்.ஜே.பாரு என்கிற பார்வதியின் டாமினேஷனில் கடந்த மூன்று நாட்களாக கலகலத்த வேடர் கூடாரம், நேற்று அமைதியானது. மாறாக அமைதியாக இருந்த காடர் கூடாரம் நான்காம் நாளான நேற்று வேற லெவலில் இருந்தது. அணித் தலைவர் காயத்ரி-விக்ராந்த் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காடர் அணியில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டது. குறிப்பாக அணித்தலைவர் காயத்ரியின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்திரஜாவில் தொடங்கி விஜயலட்சுமி வரை பெண்கள் உள்ளிட்ட அனைவரும் காயத்ரியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தனர்.
நேற்று, வேடர் அணியில் பலவீனமானவர் என்கிற முறையில் சிருஷ்டி பெயரை அஜ்மல் முன் வைத்தார். அவர் போட்டியில் இருந்து விலகுவதால் அவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்கிற கருத்தையும் லீடர் லெட்சுமியிடம் முன் வைக்கிறார். அதே போல காடர் அணியில் இந்திரஜாவை பலவீனமானவர் என அவருடன் இருக்கும் விஜயலட்சுமியே முன்மொழிகிறார். ஆனால், இந்துஜாவுடன் விஜயலட்சுமி பெயரை ராம் பரிந்துரைத்தார் விஜயலட்சுமி அவரது மகனை எண்ணி வருந்துகிறார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இப்படியாக இருதரப்பும் மாறி மாறி ஒருவர் பெயரை சொல்லி முன்மொழிந்து, அதற்காக ஒதுக்கப்பட்ட குடுவையில் பெயர்களை எழுதி போட்டனர். இந்நிலையில் லீடர் என்கிற முறையில் லட்சுமிக்கு ஒரு ரகசிய ஓலை வந்தது. அதில் அடுத்த 3 ரிவார்ட்டு சேலன்ஜில் எதிரணி ரிவார்டு ஜெயிக்கும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் பொருளில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதை ஐஸ்வர்யா உடன் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார் லட்சுமி. இதற்கிடையில் லீடர்கள் இருவரும் அர்ஜூனை சந்திக்க அழைப்பு வந்தது.
அவர்களும் புறப்பட்டுச் சென்றனர். போட்டியாளர்களின் தேர்வுப்படி பார்வதியும், ராமும் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்த்த வேளையில், லீடர்கள் வாக்களித்தபடி இந்திராஜாவும், ஸ்ருஷ்டியும் வெளியேறியது பெரிய ட்விஸ்ட். வெளியேறி வீட்டுக்குப் போவார்கள் என காத்திருந்த சமயம் இரண்டு பேரையும் அலேக்காக தூக்கிக்கொண்டு போய் இன்னொரு தீவில் விட்டுவிட்டார்கள்.
தனித்தீவில் சிருஷ்டி-இந்திரஜா!
வெளியேற்றப்பட்ட இருவரும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று நினைக்கப்பட்ட நிலையில், அவர்கள் வேறு ஒரு தீவில் விடப்பட்டனர். அங்கு ஒரு ஓலை இருந்தது. அதில் இன்னும் போட்டி முடியவில்லை என்று கூறியிருந்தது. அதைப்பார்த்த இந்திரஜாவும், சிருஷ்டியும் சிரித்தபடி மகிழ்ந்தனர். அதன் பின் காடர் கூடாரம் காட்டப்பட்டது. வெளியேற்ற ஓட்டெடுப்பு குறித்த விவாதம் அது. அதிலும் காயத்ரி-விக்ரம் இடையே மோதல். நாளை கடலில் சுவாரஸ்யமான டாஸ்க் உள்ளது. பார்க்கலாம் சர்வைவர் 6வது எபிசோட் எப்படி என்று...!