கரூரில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் - இரண்டு வார்டுகளுக்கு கடும் போட்டி..!
கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு. ஐந்து நபர்கள் போட்டியின்றி தேர்வு. இரண்டு வார்டுகளுக்கு கடும் போட்டி.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 18 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி வார்டு எண் 9, மொடக்கூர் மேற்கு ஊராட்சி வார்டு எண் 5, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண் 3, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண் 7, குளித்தலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சி வார்டு எண் 9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கருப்பம்பாளையம் ஊராட்சி வார்டு எண் 9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சி வார்டு எண் 3 ஆகிய 7 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், மொத்தம் 11 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 28 ஆம் தேதி வேட்புமனு மீது ஆய்வு செய்யப்பட்டது. வேட்புமனுக்கள் 30ஆம் தேதி திரும்ப பெறப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஐந்து பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டு பதவிகளுக்கு ஐந்து பேர் போட்டி இருக்கின்றனர். அதில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண் 3 மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் , வீரியபாளையம் ஊராட்சி வார்டுகள் 7ஆகிய இரண்டு இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண் 3ல் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 436 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டுகள் 7-யில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. அதில் 252 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் புன்னம் ஊராட்சி வார்டு எண் 3-க்கு ஆலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண் 7-க்கு வெள்ளைய கவுண்டன் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இன்று வாக்குப்பதிவை ஒட்டி வாக்குச்சாவடிகளுக்கு மை, அச்சு உள்ளிட்ட வாக்குப்பதிவு தேவையான பொருட்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பு பொருட்கள் உள்ளிட்டவை அனைத்தும் நேற்று மாலை அனைத்து வாக்குச்சாவடி பதிவு நடைபெறும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை வாக்குப்பதிவு இரண்டு வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகின்ற 12ஆம் தேதி நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் 7 ஊடக உள்ளாட்சி வார்டுகளுக்கான தேர்தலில் ஐந்து நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மீதமுள்ள இரண்டு வார்டுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்