மேலும் அறிய

Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடவில்லை திருமாவளவன் அறிவிப்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த விசிக தலைவர் திருமாவளவன், தற்போது போட்டியிடவில்லை திடீர் என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசுகையில், ”சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என நான் விரும்பினேன்.  ஏற்கெனவே திமுக கூட்டணியில் மங்களூரு தொகுதியில் வென்றவன்  நான். பதவியில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை. 2006 முதல் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னபோது மறுத்தேன். வென்றாலும் தோற்றாலும் தனிச் சின்னத்தில்தான் போட்டி என்பதில் உறுதியாக இருந்தேன். 2021 தேர்தலிலேயே எம்பி பதவியை துறந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இருந்தது. நடைபெறப்போவது வழக்கமான தேர்தல் அல்ல. வலதுசாரிகள் திட்டமிட்டு பல்வேறு சதிகளைச் செய்தார்கள். எந்த ஆசைவார்த்தைக்கும் எந்த தூண்டுதலுக்கும் ஆளாகாமல் திமுக கூட்டணியை வலுவாக்கினேன். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை 1999ஆம் ஆண்டே முழங்கியவ்நான். இந்த முறை கூட்டணி ஆட்சி பற்றி பேசமாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டோம். திமுகவுக்கு ஆதரவாக என் நிலைப்பாட்டைத்தான் சட்டப்பேரவையில் விசிக எம்எல்ஏக்கள் முன்வைத்தனர். 

எம்எல்ஏக்களுடன் கருத்து வேறுபாடா?

மூன்று எம்எல்ஏவுக்கு வாய்ப்பளிக்காதது குறித்து என் மீது அவதூறு பரப்புகின்றனர். நான் பேசாத எதையும் சட்டப்பேரவையில் விசிக எம்எல்ஏக்கள் முன்வைக்கவில்லை. விசிக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு நான் போட்டியிட வேண்டும் என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளில் போட்டியிட 150 பேர் விருப்பம் தெரிவித்தனர். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்கெனவே இருந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. திமுகவுக்கு ஆதரவாக இருந்ததால் 3 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று அவதூறு பரப்புகின்றனர். 

எனக்கு  யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. என்னை கட்டாயப்படுத்தி ஒரு வேலையை யாராலும் செய்ய வைக்க முடியாது. உள்நோக்கத்தோடு சட்டப்பேரவைக்குள் செல்ல திருமாவளவன் நினைக்கிறார் என கட்டுக்கதையை பரப்பினார்கள். திமுக கூட்டணியின் நலனை பாதிக்கும் வகையில் திட்டமிட்டு கருத்து பரப்பப்படுகிறது. முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்று நான் இருக்கமாட்டேன். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததை வைத்து எனது அரசியலேயே கொச்சைப்படுத்துகிறார்கள். பதவி ஆசை இருந்திருந்தால் 2006இல் சட்டமன்றத் தேர்தலில் நின்றிருப்பேன்” என்றார்.

நான் போட்டியிடவில்லை

வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடவில்லை என்றும் அந்த தொகுதியில் விசிக வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுவார் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்பியுமான எல்.இளையபெருமாள் மகன் ஜோதிமணி ஆவார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
DMK:
DMK: "பெயிண்ட் டப்பாவை எட்டி உதைத்து.." மனோஜ்பாண்டியனுக்கு ஆலங்குளம் தொகுதியில் எதிர்ப்பு!
வெற்றி திலகமிட்ட மனைவி, தாயின் காலில் விழுந்து வேட்புமனு தாக்கல்; மாஸ் காட்டிய திமுக சிட்டிங் எம்எல்ஏ!
வெற்றி திலகமிட்ட மனைவி, தாயின் காலில் விழுந்து வேட்புமனு தாக்கல்; மாஸ் காட்டிய திமுக சிட்டிங் எம்எல்ஏ!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்! பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்! பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?
Senthil Balaji: கொங்குவில் எப்பவும் நாங்க கிங்கு... இந்த வாட்டி இன்னும் தட்டி தூக்குவோம் - கரூரில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி
கொங்குவில் எப்பவும் நாங்க கிங்கு... இந்த வாட்டி இன்னும் தட்டி தூக்குவோம் - கரூரில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
Hyundai Offers: ரூ.1 லட்சம் தள்ளுபடி.. Grand i10 Nios முதல் i20 வரை! ஆஃபர்களை அள்ளித் தந்த ஹுண்டாய்!
Hyundai Offers: ரூ.1 லட்சம் தள்ளுபடி.. Grand i10 Nios முதல் i20 வரை! ஆஃபர்களை அள்ளித் தந்த ஹுண்டாய்!
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
Embed widget