(Source: ECI/ABP News/ABP Majha)
செந்தில் பாலாஜிக்கு செக் வைக்க கொட்டும் மழையில் வாக்கு சேகரித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்...!
’’வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பரப்புரை தீவிரம்’’
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை காலியாக உள்ள இடங்களுக்கு 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்து மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பரப்புரை சூடுபிடித்துள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: இடப்பங்கீட்டில் என்.ஆர்.காங்-பாஜக-அதிமுக இடையே இழுபறி
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 15 இடங்களுக்கு தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 8ஆவது வார்டு, க.பரமத்தி 8ஆவடுஹ் வார்டு பகுதிகளிலும் திமுக, அதிமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் போட்டிப்போட்டுக்கொண்டு தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கரூர் மாவட்ட திமுக செயலளாரும் மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜியும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டாபோட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள்...!
உள்ளாட்சித் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டத்தை பிரம்மாண்டமாக செந்தில் பாலாஜி நடத்திய நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு கூட தெரிவிக்காமல் செயல்வீரர்கள் கூட்டத்தை சத்தமின்றி நடத்தி முடித்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இந்த நிலையில் தாந்தோணி ஊராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டு பகுதியில் போட்டியிடும், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்மான தானேஷ் என்கின்ற முத்துக்குமாரை ஆதரித்து இரவு, பகலாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் விடாமல் கனமழை பெய்து வரும் நிலையில், தாந்தோணி ஊராட்சிக்கு உட்பட்ட மணவாடி ஊராட்சி, அம்மன் நகர், பெருமாள்பட்டி காலனி, எஸ் டி காலனி, மருதம்பட்டி காலனி, மாணிக்கபுரம், கன்னிமார் பாளையம், கருப்பா கவுண்டன்புதூர், மருதம்பட்டி , கத்தாளப்பட்டி காலனி, கத்தாளம்பட்டி எஸ்டி காலனி உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் கொட்டும் மழையில் மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு வருகிறார்.
‛நான் பேசமாட்டேன்... என் அருவா... தான் பேசும்...’ டயலாக் பேசிய டக்ளஸ்... லாக்கப்பில் பேக்கப்!
10 ஆம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு!
இந்த தேர்தல் பரப்புரையில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த 4 மாத கால ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அப்படியே தேங்கி உள்ளது, கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து திட்டங்களும் கண்துடைப்பாகவே உள்ளது, நாளுக்கு நாள் மின் தடை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் கதை, கதையாக பேசி வருகிறார் என செந்தில் பாலாஜியை விமர்சித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற பிரபல யூடியூபர் வீட்டில் 2 ஆவது நாளாக சோதனை - பென் டிரைவ் சிக்கியது