மேலும் அறிய

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

கூடுதல் வழக்கு விசாரணைக்கு கால அவகாசம் அரசு தரப்பில் கேட்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை வருகின்ற அக்டோபர் 29 ம் தேதிக்கு நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். கடந்த முறை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, கூடுதல் விசாரணைக்கு 4 வார கால அவகாசம் அளித்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இதையடுத்து  ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகிய 6 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி இரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 4 பேரிடம் இதுவரை நடத்தப்படவில்லை. இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாகவும் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

இந்நிலையில் கோடக்கு வழக்கு தொடர்பாக இன்று நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி வழக்கு விசாரணைக்காக சயன் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர், நீதிமன்றத்தில் சென்றார். இதேபோல நீலகிரி காவல் துறையினரும் வழக்கு விசாரணைக்காக ஆஜராகினர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜரானர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சயன், வாளையார் மனோஜ் தவிர்த்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையின் போது கோடநாடு கொலை கொள்ளை வழக்கு கூடுதல் விசாரணை அறிக்கையை காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 37 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் வழக்கு விசாரணைக்கு கால அவகாசம் அரசு தரப்பில் கேட்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை வருகின்ற அக்டோபர் 29 ஆம் தேதிக்கு நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்தார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன், “கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் ஆஜராகவில்லை என்பதை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. காவல் துறையினர் ஏற்கனவே கூறியபடி விசாரணை அறிக்கையை இரகசிய ஆவணமாக சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர். காவல் துறையினர் 40 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். காவல் துறை விசாரணை திருப்திகரமாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Embed widget