மேலும் அறிய

புதுச்சேரி வேட்பாளர்கள் எப்போது வேண்டுமானாலும் சி.சி.டி.வி.யை ஆய்வு செய்யலாம் - தேர்தல் அதிகாரி

வேட்பாளர்கள் எந்த நேரமும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டு அங்கு ஒளிபரப்பப்படும் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சிகளை நேரடியாக பார்த்துக் கொள்ளலாம்

புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலுக்கான வாக்கு பதிவு (19.04.2024) அன்று  நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குச்சாவடியிலிருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM & VVPAT) லாஸ்பேட்டையில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களான அரசு மகளிர் பொறியியல் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்போடு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வாக்குப்பதிவு குறித்த சீராய்வு கூட்டம் தேர்தல் பொதுப் பார்வையாளர் டாக்டர். பியுஷ் சிங்லா  மற்றும் புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுள் ஒன்றான அரசு மகளிர் பொறியியல் கல்லூரியின் பயிலரங்கு கூட்டத்தில் நடைபெற்றது.

மூன்று அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு குறித்து சீராய்வு செய்த பொதுப் பார்வையாளர் டாக்டர். பியுஷ் சிங்லா புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது. இது தனக்கு முழு திருப்தியைத் தருவதாகத் தெரிவித்தார். பின்னர் பேசிய தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்களில் CRPF, IRB மற்றும் மாநில காவல் துறை என மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கண்காணிப்பு

கட்டுப்பாட்டு அறைகள் உட்பட வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்கள் முழுவதும் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் எந்த நேரமும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டு அங்கு ஒளிபரப்பப்படும் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சிகளை நேரடியாக பார்த்துக் கொள்ளலாம்.  புதுச்சேரியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய வேட்பாளர்கள் முகவர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget