மேலும் அறிய

PM Modi: ”நீலகிரி தேயிலையை பார்த்ததால் டீ விற்பவரின் மகனுக்கு மகிழ்ச்சி” - பிரதமர் மோடி

PM Modi: நீலகிரி தேயிலையை பார்த்ததால் டீ விற்பவரின் மகனுக்கு மகிழ்ச்சிதான் என பிரதமர் மோடி தெரிவித்தார்

நீலகிரி தேயிலையை பார்த்ததால் டீ விற்பவரின் மகனுக்கு மகிழ்ச்சிதான் என மேட்டுபாளையத்தில் நடைபெற்று வரும் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கோவையில் பிரதமர்:

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று கோவை மேட்டுப்பாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரை கூட்டத்தில் உரையாற்றினார்.

பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, ”நீலகிரி தேயிலையை பார்த்ததால் டீ விற்பவரின் மகனுக்கு மகிழ்ச்சிதான். நீலகிரி வேட்பாளர் எல்.முருகனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வெறுப்பு அரசியலை பின்பற்றுகிறது திமுக அரசு, சனாதன தர்மத்தை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்து கொண்டிருக்கிறது.  

திமுக - வாரிசு அரசியல்:

PM Modi: ”நீலகிரி தேயிலையை பார்த்ததால் டீ விற்பவரின் மகனுக்கு மகிழ்ச்சி” - பிரதமர் மோடி

குடும்ப வாரிசுகளே அரசியல் தலைவர்களாக வர வேண்டும் என திமுகவினர் நினைக்கிறார்கள். திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு பாஜகவால் மட்டுமே முடியும். தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் தி.மு.க., பழைய அரசியலில், ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை.

திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. மூன்று முக்கிய அளவுகோல்கள் - குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழ் கலாச்சார எதிர்ப்பு.

குடும்ப அரசியல், ஊழலால் திமுக தமிழகத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறது. தமிழகத்தை, திமுக குடும்பம் கொள்ளை அடிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது திமுக.

திமுக கட்சியானது பழைய சிந்தனையிலேயே இருக்கிறது. தற்போது,  தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கம் மற்றும் கடத்தல் அதிகரித்துள்ளது. திமுக, காங்கிரஸ்காரர்கள் தங்கள் சந்ததிகளை மட்டுமே முன்னிறுத்துவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

பல லட்சம் கோடி நிதி:

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வால் கோவை ஜவுளி தொழில் பாதித்துள்ளது . திமுக, காங்கிரஸால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. 

பாஜக அரசானது, பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கியுள்ளது . மத்திய அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு மின்சாரமும், குடிநீரும் வழங்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதையடுத்து, வந்தே மாதரம் என தொண்டர்களின் பலத்த கோசத்துடன் உரையை முடித்தார் பிரதமர் மோடி 

Also Read: Power Pages-5: பிறந்த இடத்தில் தோல்வி; 3 முறை பிரதமர்; 2 முறை ஆட்சி கவிழ்ப்பு: தெரியுமா வாஜ்பாய் வரலாறு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
Malawi Vice President: அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NEET Thiruvarur student  : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்PM Modi 3.0 Cabinet  : அதிக பலத்துடன் அமைச்சரவை! அரசு பலம் இழந்ததா? காரசார விவாதம்PM Modi First Signature : பதவியேற்ற அடுத்த நாளே!மோடியின் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா?Suresh Gopi  : ”அமைச்சர் பதவி வேண்டாம்”சுரேஷ் கோபி பகீர் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
Malawi Vice President: அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Embed widget