மேலும் அறிய

Erode By Election: இடைத்தேர்தலில் புது ட்விஸ்ட்.. வேட்பாளரை திரும்ப பெறுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்..? பின்னணி என்ன?

உச்சநீதி மன்ற தீர்ப்பினை அடுத்து, பொதுக்குழுவில் பெரும்பான்மை கிடைக்காது என்பதால்  ஓ.பன்னீர் செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் இன்று (04/02/2023)ஈடுபட்டார். பொதுக்குழு மூலம் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது. முக்கிய தலைவர்களான வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொதுக்குழுவில் பெரும்பான்மை கிடைக்காது என்பதால் வேட்பாளரை திரும்பப் பெறுவது குறித்து ஓ. பன்னீர் செல்வம்  ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஈரோடு இடைத்தேர்தலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அ.தி.மு.க. சார்பில் செந்தில்முருகன் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யட்டும் என குறிப்பிட்டது. 

ஏற்கனவே, “அதிமுகவின் சின்னம் முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன்” என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு அதிமுக ஒரே அணியாக இருக்கும் என கூறியிருந்தார்.  

ஏற்கனவே பழனிச்சாமி அணியில் உள்ள சிலர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும், அதிமுகவில் தற்போது கவுண்டர் சமுதாயத்தினைச் சார்ந்தவர்களின் கரங்கள் ஓங்கி இருப்பதால், ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தாலும் அதனை வெளிப்படையாக சொல்ல முடியாமல் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. 

2021ல் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், தென் தமிழ்நாட்டில் அதிமுக வாக்குகள் திமுகவுக்கும் கணிசமாக நாம் தமிழருக்கும், அமமுகவுக்கும் சென்றதால் அதிமுகவால் கொடி நாட்ட முடியவில்லை. இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்துக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையே உட்கட்சிக்குள்ளும் சட்டமன்றத்திலும் சொற்பமாகிவிட்டது.  

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் இடைத்தேர்தல் நடந்தாலும், ஓ. பன்னீர் செல்வத்துக்கு செல்வாக்கு என்பது 1 சதவீதத்தை எட்டுமா என்பதே கேள்விக்குறிதான். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக களமிறங்க ஓ. பன்னீர் செல்வம் கையெழுத்து போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுக்குழுவில் அதிமுக சார்பில், எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் தான் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுக்கபடுவார் என்பதால், ஓ. பன்னீர் செல்வம் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

வேட்பாளர் வாபஸ் பெற பட்டாலும், ஓ. பன்னீர் செல்வம் ஈரோடு கிழக்கு தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்வாரா? அப்படி சென்றால் அவருக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். 

அதிமுக வட்டாரத்தில் இப்படியான நிலை இருக்க ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓரங்கட்ட படுவதற்கான படிநிலையில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது. 

பாஜக இருவரையும்  இணைந்து பணியாற்ற சொன்னாலும்,  எடப்பாடி தரப்பில், எங்கள் கூட்டணியில் பயணிக்க விரும்பினால், எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனவும், ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டால் , உங்களுடன் இணைந்து செயல்பட முடியாது என திட்டவட்டமாக கூறி உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
Chembarambakkam Lake: உருவெடுத்தது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: உருவெடுத்தது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Indias GDP: மோடி 3.0 ஆட்சிக்கு வந்த சோதனை - 2 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி, இந்தியாவின் ஜிடிபிக்கு என்னாச்சு?
Indias GDP: மோடி 3.0 ஆட்சிக்கு வந்த சோதனை - 2 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி, இந்தியாவின் ஜிடிபிக்கு என்னாச்சு?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
”காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவன் ; அடித்துக்கொலை செய்த 2 பேர்” நடந்தது இதுதான்..!
”காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவன் ; அடித்துக்கொலை செய்த 2 பேர்” நடந்தது இதுதான்..!
Embed widget