NTK Candidates: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் அறிவிப்பு; யார்; எங்கு போட்டி?
NTK Candidates: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை அறிவித்தார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
2024 மக்களை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 20 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் அடங்கிய 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மக்களவை தேர்தல்:
நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து, ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி எந்தவொரு கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது.
இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 40 பேரை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து, 20 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் அடங்கிய 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார்.
சிதம்பரம் தொகுதி வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகிறார்.
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் போட்டியிடுகிறார்.
மதுரை தொகுதி வேட்பாளர் மோ.சத்யாதேவி
தேனி தொகுதி வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலன் உள்ளிட்ட 40 தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்பாடுத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அப்போது பேசிய சீமான், ”தனித்து நிற்கிறோம் ! தனித்துவத்தோடு நிற்கிறோம் ! மற்றவர்தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டுவதை விட, தனித்து நின்று உண்மையான உயரத்தைக் காட்டுவதே மேலானது.
காலையில் வாக்குப் பதிவு என்றால் இரவு சொன்னால் கூட சின்னத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஆற்றல் ,திறமை கொண்ட தகவல் தொழில்நுட்பப் படை பிரிவை கொண்டுள்ளேன்.
பணம் இல்லை, ஆனால் மக்களுக்கு தன்னலமற்று சேவை செய்ய வேண்டும் என்கிற மனம் இருக்கிறது” என சீமான் தெரிவித்தார்.