(Source: ECI/ABP News/ABP Majha)
BJP Manifesto Highlights: ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் அமல்... பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள் இதோ!
BJP Election Manifesto 2024 Highlights: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
BJP Election Manifesto: 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக அலுவகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை பாஜக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. மூன்றாவது முறையாக மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த இரு தேர்தலில் பாஜக வெற்றிக்கு அக்கட்சியின் தேர்தல் அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த தேர்தல் அறிக்கையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. இதற்கான நமோ செயலி மூலம் 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் கேரண்டி 2024 என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் | BJP Election Manifesto 2024 Highlights:
- 2025 ஆம் ஆண்டு பழங்குடியினரின் பெருமையை பசைசாற்றும் ஆண்டாக கடைபிடிக்கப்படும்
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் - பொதுவான வாக்காளர் பட்டியல் முறை அறிமுகம் செய்யப்படும்
- மேலும் 5 ஆண்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்
- 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
- சூரிய ஒளி மூலம் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முத்ரா கடன் திட்டத்தின் தொகை உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு
- நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் .
- வேலை வாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- கிராமங்களில் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்படும்.
- இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதாரா நாடாக மாற்றுவோம்
- நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் திருநங்கைகளும் சேர்க்கப்பட்டு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் தொடர்ந்து செயல்படும்
- பெண்களுக்கு சுகாதார பாதிப்பை உறுதிப்படுத்த ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்
- ஏழைகளுக்கு தரமான வீடுகள் கட்டி தரப்படும்.