தேனி: குதிரை மூலம் மலை கிராமங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பப்பட்டது
சாலை வசதி இல்லாத நிலையில் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்குப்பொட்டி அனுப்பு அவலம் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போது சாலை வசதி இல்லாத நிலையில் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்குப்பொட்டி அனுப்பு அவலம் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது அமைக்கும் 18வது மக்களவை உறுப்பினர் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், தேனி மக்களவைத் தேர்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும்பணி நடைபெற்றது.
Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
இந்நிலையில், போடி சட்டமன்ற தொகுதியில் பெரியகுளம் பகுதியில் அகமலை ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கு வாக்குப்பெட்டி அனுப்பும்பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
CM MK Stalin: "வாக்குச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரை!
குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதியில் ஆறு சட்டமன்ற உள்ளடக்கிய நிலை போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கு இன்று வாக்குப்பெட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டு வருகின்றன. போடி தொகுதி 10 மலை கிராமங்களுக்கு வாக்குப்பெட்டி அனுப்பப்பட்டு வருகின்றன.
Google Layoff: இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் - 28 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்
மலை கிராமங்கள் ஆன காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாக வாக்குப்பெட்டி அனுப்பப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர் வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பெட்டியானது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பப்பட்டது.