Local Body Election 2022 | மனைவியை நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க - மதுரையில் ட்ரண்டாகும் அமமுக வேட்பாளரின் போஸ்டர்
’’மதுரை மாநகராட்சியின் 61வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அமமுக சார்பில் பெண் வேட்பாளர் பாத்திமா பீவி போட்டி’’
தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மும்முரமாக இறங்கி உள்ளது. தேர்தல் பணிக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதது குறிப்பிட தக்கது. இந்நிலையில் மதுரையில் பெண் வேட்பாளர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.
#Abpnadu | மனைவியை நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க.., so குக்கருக்கு ஓட்டு போடுங்க.., என பெண் வேட்பாளர் ஒட்டியுள்ள போஸ்டர் வாக்காளர் கவனத்தை ஈர்த்துள்ளது.#abpnadu | #madurai | #election #localbodyelection | #postet #Trending | @krishna_venii @ganeshkumar_pt pic.twitter.com/uM5g7Q5USL
— Arunchinna (@iamarunchinna) January 31, 2022