karti chidambaram: ஆணவத்தில் பேசியவர்களுக்கு இந்த தேர்தல் அடக்கத்தை கற்பித்துள்ளது - கார்த்தி சிதம்பரம்
தமிழகத்தில் 40 தொகுதிகள் வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம். எனது வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் 300 முதல் 400 இடங்களை பெறுவோம் என ஆணவத்தில் பேசியவர்களுக்கு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல் அடக்கத்தை கற்பித்துள்ளது என காரைக்குடியில் கார்த்திக் ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.
மக்களவை தேர்தல் முடிவு 2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. வாக்குப்பதிவிற்கு பிறகு 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என பா.ஜ.க., கூட்டணியும், 295 இடங்களை கைப்பற்றுவோம் என I.N.D.I.A. கூட்டணியும் பேசி வந்தது. ஆனால், பா.ஜ.க., கூட்டணி 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மத்தியில் யார் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் 300 முதல் 400 இடங்களை பெறுவோம் என ஆணவத்தில் பேசியவர்களுக்கு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல் அடக்கத்தை கற்பித்துள்ளது என கார்த்தி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
கார்த்தி ப.சிதம்பரம் பேட்டி
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் கார்த்தி ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம் 4,27,677 வாக்குகள் பெற்றார். மேலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாசை விட 2,05,664 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு, சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆஷா அஜித் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது முன்னாள் அமைச்சர் பா சிதம்பரம் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது...,”தமிழகத்தில் 40 தொகுதிகள் வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். எனது வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 300 முதல் 400 இடங்களை பெறுவோம் என ஆணவத்தில் பேசியவர்களுக்கு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல் அடக்கத்தை கற்பித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TR Balu: "இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்" வெற்றி பெற்ற கையோடு டி.ஆர்.பாலு சொன்னது என்ன?
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ’இந்த தேர்தலில் தோற்றிருக்கலாம், நான் இன்னும் தோற்கவில்லை’ - அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

