June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
ஜூன் மாதமான இந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள், பண்டிகை வருகிறது என்பதை கீழே காணலாம்.
ஒவ்வொரு ஆண்டின் இரண்டாம் தொடக்கமாக பார்க்கப்படுவது ஜூன் மாதம் ஆகும். இந்த வருடத்தின் ஜூன் மாதம் பிறந்து மக்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதம் எந்த தேதியில் என்னென்ன விசேஷம் வருகிறது? என்பதை கீழே காணலாம்.
என்னென்ன விசேஷங்கள்:
4ம் தேதி – செவ்வாய் - ஏகாதசி விரதம்
5ம் தேதி – புதன்கிழமை - கார்த்திகை விரதம், உலக சுற்றுச்சூழல் நாள்
6ம் தேதி – வியாழன் - அமாவாசை, சாவித்ரி விரதம்
7ம் தேதி – வெள்ளி - சந்திர தரிசனம், முதுவேனில்காலம்
10ம் தேதி – திங்கள் – சதுர்த்தி விரதம், சோமவார விரதம்
12ம் தேதி – புதன் – சஷ்டி விரதம்
14ம் தேதி – வெள்ளி – ரிஷப விரதம்
15ம் தேதி – சனி - மிதுன சங்கராந்தி, சபரிமலை நடை திறப்பு
16ம் தேதி – ஞாயிறு - தந்தையர் தினம்
17ம் தேதி – திங்கள் - பக்ரீத்
18ம் தேதி - செவ்வாய் – ஏகாதசி விரதம்
19ம் தேதி – புதன் - பிரதோஷம்
21ம் தேதி – வெள்ளி – பௌர்ணமி விரதம், சாவித்ரி விரதம்
22ம் தேதி – சனி - பௌர்ணமி
25ம் தேதி - செவ்வாய் – சங்கடஹர சதுர்த்தி, திருவோண விரதம்
இந்த மாதத்தில் மேற்கண்ட தேதிகளில் இந்த விசேஷங்கள் வருகிறது. குறிப்பாக, வரும் 15ம் தேதி சபரிமலையில் நடை திறக்கப்படுவது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அது மட்டுமின்றி இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் வரும் 17ம் தேதி வருகிறது.