இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காத உத்தவ் தாக்கரே, மம்தா; ஸ்கெட்ச் யாருக்கு? கூட்டத்தில் நடந்தது என்ன?
India Alliance Meeting: இன்றைய இந்திய அணி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, மம்தா ஆகிய முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது பேசு பொருளாகியுள்ளது.
இன்றைய மாலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், இந்திய கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.
இந்தியா அணி கூட்டம் :
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பாக தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவிக்கையில், அரசியலமைப்பு மீது மதிப்பு கொண்டவர்கள் இந்தியா கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், தேர்தலின் முடிவானது, மோடிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட தோல்வி, அதை மாற்ற துடிக்கிறார்கள். மோடிக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்தும், அதை மாற்ற துடிக்கிறார்கள். உறுதியாக போராடினோம், அதற்காக கூட்டணி தலைவர்களுக்கு நன்றி என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.
தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "என்.டி.ஏ.க்கு எண்ணிக்கை பலம் உள்ளது, ஆனால் பீகாரை கவனித்து சிறப்பு அந்தஸ்து பெறுவதை உறுதி செய்யும் அரசு அமைக்கப்பட வேண்டும். நிதிஷ் குமாருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, அவர் கிங் மேக்கராக இருந்தால், அவர் பீகாரை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்
INDIA जनबंधन की बैठक में मेरा शुरुआती वक्तव्य —
— Mallikarjun Kharge (@kharge) June 5, 2024
1. मैं INDIA गठबंधन के सभी साथियों का स्वागत करता हूँ। हम एक साथ लड़े, तालमेल से लड़े और पूरी ताक़त से लड़े। आप सबको बधाई!
2. 18वीं लोक सभा चुनाव का जनमत सीधे तौर से प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के ख़िलाफ़ है। चुनाव उनके नाम और… pic.twitter.com/NdruqP02p5
யார் பங்கேற்கவில்லை:
இந்தியா அணி கூட்டத்தில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்காதது பல்வேறு கருத்துக்களுக்கு இடமளித்துள்ளது. இருவரும் , தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே 9 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றிருக்கிறார். மேற்கு வங்கத்தில் 29 தொகுதிகளில் மம்தா தனித்து வெற்றி பெற்றிருக்கிறார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், இவர்கள் இருவரும் பங்கேற்காத நிலையில், பலரும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் உள்ளவர்களை ஈர்ப்பார்கள் என நினைத்தால், இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களை விட்டு விடுவார்களோ என்றும், பாஜகவுக்கு ஸ்கெட்ச் போடுவாங்கனு பார்த்தா, இந்தியா கூட்டணிக்கு ஸ்கெட்சா என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்தது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே மற்றும் மம்தா பானர்ஜி ஆகிய இருவரும் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை என்றும், இவர்களின் சார்பாக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.