NTK Lose Deposit: ஈரோடு தேர்தலில் டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்: டெபாசிட் என்றால் என்ன?
NTK Deposit Lost: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியானது தோல்வியடைந்த நிலையில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1.14 லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று, வெற்றி பெற்றுள்ளார். அதே சமயத்தில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமி 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டிற்கான வாக்குகளை பெற முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ_வாக இருந்த, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைந்த நிலையில், மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில், காங்கிரசு போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக போட்டியிட்டது. திமுக சார்பாக சந்திரகுமார் போட்டியிட்டார்.
ஆனால், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிட்டார்.
இங்கு தேர்தலானது , கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இங்கு காலை முதலே திமுக வேட்பாளரே முன்னிலை வகித்து வந்தார். 17 சுற்றுகள் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
டெபாசிட்டை இழந்த நாதக:
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1, 14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23, 810 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில், 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதே தருணத்தில் 1,967 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட்டை இழந்துள்ளார். நோட்டாவில் 6040 வாக்குகள் பதிவாகியுள்ளன.
Also Read: ”இந்த ஜென்மத்தில் எங்களை தோற்கடிக்க முடியாது மோடி”: வைரலாகும் கெஜ்ரிவால் பழைய வீடியோ!
டெபாசிட் என்றால் என்ன?
டெபாசிட் என்றால், தேர்தலில் போட்டியிடுபவர்கள், தேர்தல் ஆணையத்தில் குறிப்பிட்ட தொகையாக டெபாசிட்டாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சதவிகித வாக்கு தொகைக்கு மேல் பெற்றால் மட்டும்தான், டெபாசிட் தொகையானது வேட்பாளருக்கு திரும்பி தரப்படும்; இல்லையென்றால் டெபாசிட் தொகை திரும்ப தரப்படமாட்டாது. இதன் மூலம், தேவையின்றி விளையாட்டுத்தனமாக போட்டியிடுபவர்களை தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் , குறிப்பிட்ட தொகை என்னவென்றால், நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ. 25,000 டெபாசிட் செலுத்த வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் ரூ. 10, 000 டெபாசிட் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட வாக்கு என்னவென்றால், பதிவான வாக்குகளில் 6ல்1 பங்கு வாக்கிற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால், டெபாசிட் தொகையானது, திரும்ப தரப்பட மாட்டாது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 1,54,675 வாக்குகள் பதிவாகின. இதில் 6ல் 1 பங்கு என பார்க்கையில் 25,776 வாக்குகள் வருகிறது. ஆகையால் 25,776 வாக்குகள் குறைவாக பெற்றால், டெபாசிட் தொகையானது திரும்ப தரப்படமாட்டாது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் 23, 810 வாக்குகள் பெற்று டெபாசிட்டிற்கான குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.





















