மேலும் அறிய

Local Body Election| அப்பனே விநாயகா எப்புடியாவது தாமரைய மலர வச்சுடுப்பா - மயிலாடுதுறையில் பாஜக வேட்பாளர்கள் பிரார்த்தனை

நகராட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தாமரை மலர் மாலை அணிவித்து விநாயகரிடம் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்கள்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

Local Body Election| அப்பனே விநாயகா எப்புடியாவது தாமரைய மலர வச்சுடுப்பா - மயிலாடுதுறையில் பாஜக வேட்பாளர்கள் பிரார்த்தனை

இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. 

Local Body Election| அப்பனே விநாயகா எப்புடியாவது தாமரைய மலர வச்சுடுப்பா - மயிலாடுதுறையில் பாஜக வேட்பாளர்கள் பிரார்த்தனை

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 286 மனுக்கள் ஏற்கப்பட்டது. சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 147 மனுக்கள் ஏற்கப்பட்டன. குத்தாலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 118 மனுக்களும் இதேபோன்று மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 101 மனுக்களும் ஏற்கப்பட்டன. 

Local Body Election| அப்பனே விநாயகா எப்புடியாவது தாமரைய மலர வச்சுடுப்பா - மயிலாடுதுறையில் பாஜக வேட்பாளர்கள் பிரார்த்தனை

தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 105 மனுக்களும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 81 வேட்புமனுக்களும் எவ்வித நிராகரிப்பு இன்றி அனைத்தும் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்த நிலையில் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் களம் இறங்கி உள்ளனர்.

Local Body Election| அப்பனே விநாயகா எப்புடியாவது தாமரைய மலர வச்சுடுப்பா - மயிலாடுதுறையில் பாஜக வேட்பாளர்கள் பிரார்த்தனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் பாஜக சார்பில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.    மயிலாடுதுறை நகராட்சி 16 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சந்திரசேகரன், 6 ஆவது வார்டில் போட்டியிடும் பாரதிகண்ணன் ஆகியோர் சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர்  பாஜக நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு தாமரையிலான மாலையை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர். 16 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சந்திரசேகரன்  வீடு வீடாக சென்று தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களுக்கு தாமரை சின்னத்தை நினைவுபடுத்தும் வகையில் தாமரை மலரை கொடுத்து வாக்கு சேகரித்தார்.

Local Body Election| அப்பனே விநாயகா எப்புடியாவது தாமரைய மலர வச்சுடுப்பா - மயிலாடுதுறையில் பாஜக வேட்பாளர்கள் பிரார்த்தனை

இதேபோல் 6 வது வார்டில் போட்டியிடும் பாரதி கண்ணன் வீடு வீடாக சென்று பொதுமக்களின் கால்களில் விழுந்து வணங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  பாஜக வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு தான் போட்டியிடும் சின்னமான தாமரை மலரினை  கொடுத்தும் கால்களில் விழுந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க

Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி

Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி

Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை

Embed widget