Assembly Election 2024 Dates: ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் எப்போது?- தேதி அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த 2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நான்காம் கட்டத் தேர்தல் மே 13, 5ஆம் கட்டத் தேர்தல் மே 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல 6ஆவது கட்டத் தேர்தல் மே 26ஆம் தேதியும் கடைசியாக 7ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு
அதேபோல அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அருணாச்சலப் பிரதேசத்துக்கு ஏப்ரல் 19ஆம் தேதியும் அருணாச்சலப் பிரதேசத்துக்கு மே 13ஆம் தேதியும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒடிசா மாநிலத்துக்கு மே 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்வு நடைபெற உள்ளது. சிக்கிம் மாநிலத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் விளவங்கோடு உள்ளிட்ட 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
*
மக்களவைத் தேர்தல் எப்போது?
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நான்காம் கட்டத் தேர்தல் மே 13, 5ஆம் கட்டத் தேர்தல் மே 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல 6ஆவது கட்டத் தேர்தல் மே 26ஆம் தேதியும் கடைசியாக 7ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை தேதி இதுதான்!
ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதேபோல விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.