மேலும் அறிய

எந்தக் கல்லூரி டாப்? - 481 பொறியியல் கல்லூரி தரவரிசையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

Engineering College Rank List 2022 Tamil Nadu: கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள KKC தனியார் பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

Engineering College Rank List 2022 Tamil Nadu: 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள KKC தனியார் பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது. 

இந்த சூழலில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியாகின. அன்றில் இருந்தே பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1.51 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

இந்நிலையில், 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள KKC தனியார் பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

எந்தக் கல்லூரி டாப்? - 481 பொறியியல் கல்லூரி தரவரிசையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

முதல் 10 இடங்களில் எந்தக் கல்லூரிகள்?

2-ஆவது இடத்தில் குரோம்பேட்டை எம்ஐடி வளாகக் கல்லூரி இடம் பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தனியார் கல்லூரியும், 4ஆவது இடத்தில் செங்கல்பட்டு சிவசுப்பிரமணிய நாடார் (எஸ்எஸ்என்) தனியார் கல்லூரியும் உள்ளன. 

அதேபோல, கோயம்புத்தூர் சிஐடி கல்லூரி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 6ஆவது இடத்தில் மதுரை தியாகராஜர் தனியார் கல்லூரியும் 7ஆவது இடத்தில், கோயம்புத்தூர் சிஐடி கல்லூரியும் உள்ளன. 

PSG இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி 8ஆவது இடத்தில் உள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் கல்லூரி 9ஆவது இடத்திலும் கோயம்புத்தூர் குமரகுரு தனியார் கல்லூரி 10ஆவது இடத்திலும் உள்ளன.

அதேபோல 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் ஓசி பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் கல்லூரி வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. 

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எந்தக் கல்லூரி எந்த இடத்தைப் பிடித்துள்ளது?- முழுமையாக அறிய:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget