TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
Tamil Nadu 12th Result 2025 Date: நாளை மறுநாள் ஏப்ரல் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

TN 12th Result 2025: தமிழகப் பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெற்ற 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஒருநாள் முன்னதாக வெளியாக உள்ளன.
இதன்படி, மே 8ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
2024- 25ஆம் கல்வி ஆண்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்காகத் தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்
தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்றன. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
குறிப்பாக நாளை மறுநாள் ஏப்ரல் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?
மாணவர்கள் தங்களின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
results.digilocker.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் காலை 9.00 மணிக்கு தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெறலாம்
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மொபைல் வழியாகவும் பார்க்கலாம்
மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும் தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.






















