TNPSC Reforms: அம்மாடியோவ்.. ஒரே ஆண்டில் இத்தனை சீர்திருத்தங்களா? பட்டியலிட்ட டிஎன்பிஎஸ்சி!
2024-ம் ஆண்டில் 10,701 தேர்வர்கள் தெரிவு மற்றும் 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் நிலுவையி இருந்த 30 தேர்வுகளின் தெரிவுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர்.
2024ம் ஆண்டு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க, 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் செயல்பாடுகள்) சட்டத்தின் கீழ் 42 பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், மற்றும் சட்டபூர்வ ஆணையங்களில் (authorities) உள்ள 1406 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 661 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு (shortfall) காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வளியிடப்பட்டுள்ளன.
2024ம் ஆண்டு தேர்வர்களின் நலன் கருதியும், தெரிவுப்பணிகளை விரைவுபடுத்தவும் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை:
தேர்வு நடைமுறைகளில் இவளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 2024-ம் ஆண்டு தெரிவுப் பணிகள் நிறைவுபெற்ற 30 தேர்வுகளில் தெரிவு பெற்ற தேர்வர்களின் பதிவெண்களுடன் கூடிய தெரிவுப் பட்டியல், கொள்குறி வகையில் நடைபெற்ற 25 தேர்வுகளுக்கான இறுதி விடைகள் (answer keys), விரிந்துரைக்கும் வகையில் (descriptive type) நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளின் (குரூப் I, IA, 2, மற்றும் 2ஏ பணிகள்) தேர்வர்களுடைய விடைப்புத்தகங்கள் (Answer booklets), மற்றும் 27 தேர்வுகளில் தெரிவு செய்யப்படாத தேர்வர்களின் மதிப்பெண்களின் விவரங்கள் தேர்வாணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வுகளின் ஆண்டுத்திட்டம் (Annual Planner)
அறிவிக்கை வெளியிடப்படும் நாள், தேர்வு நடைபெறும் நாள் ஆகிய விவரங்களுடன் கூடிய 2024ம் ஆண்டிற்கான திருத்திய தேர்வுகளின் ஆண்டுத்திட்டம் வெளியிடப்பட்டு, அனைத்து அறிவிக்கைகளும்ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் அல்லது அதற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து தேர்வுகளும் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்பட்டுள்ளன. மேலும், தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக டிசம்பர் 2024-ல் வெளியிடப்பட வேண்டிய 2025-ம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத்திட்டம், இரண்டு மாதங்களுக்கு முன்பாக அக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுதல்:
2024ம் ஆண்டு மதிப்பீட்டுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் – குரூப் 1, 2, 2ஏ மற்றும் 4 பணிகளின் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டுகளைவிட விரைவாக வெளியிடப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1 பணிகள்) க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 33 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த சூடிமைப்பணிகள் தேர்வு-11 (குரூப் 2, 2ஏ பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 57 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- 4 (குரூப் 4 பணிகள்)-க்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள்ளும் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வுத் திட்டம் (Scheme of Examination)
தேர்வர்களின் நலன் கருதி, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 2A பணிகளின் முதன்மைத் தேர்விற்கான தேர்வுத்திட்டம் கொள்குறி வகையாக (objective type) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – குரூப் 2 பணிகள் மற்றும் தொழில்நுட்பத் தேர்வுகளில் சம்பள ஏற்ற முறை 17 முதல் 20 வரை உள்ள பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி IA மற்றும் VI பணிகளுக்கான தேர்வுத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தெரிவுப்பணிகளை விரைவுபடுத்த, தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப்பணிகள் தேர்வுகள் (நேர்முகத்தேர்வு பதவிகள், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப் படிப்பு, தொழிற்பயிற்சி தரம்) என மூன்று நிலைகளாக ஒருங்கிணைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
தேர்வர்களின் நலன் கருதி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளின் முதல்நிலை தேர்விற்கான பொதுத்தமிழ் பாடத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - தொகுதி 4 பணிகளின் தமிழ் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் (syllabus) மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் – குரூப் 1, 2, 2A மற்றும் IV பணிகளுக்கான தேர்வுகளில் அலகுவாரியாக கேட்கப்படும் கேள்விகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பெண்களுடன் கூடிய பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசுத் துறைகளின் தேவைக்கேற்பவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கவும், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப்பணிகள் தேர்வுகளில், 31 பாடத் தாள்களுக்கான (subject papers) பாடத்திட்டங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் 34 பாடத்தாள்களுக்கான பாடத்திட்டங்கள்புதுப்பிக்கப்பட்டுள்ளன.
கணினி வழித் தேர்வு (Computer Based Test):
தேர்வு நடத்தும் முறைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக, 1,49,971 தேர்வர்கள் விண்ணப்பித்த ஒருங்கிணைந்த ழில்நுட்பப்பணிகள் தேர்வுகளில் (நேர்முகத்தேர்வு பதவிகள், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப் படிப்பு , தொழிற்பயிற்சி தரம்) 103 பாடத்தாள்களுக்கான தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்பட்டுள்ளன.
தெரிவு அட்டவணை (Selection Schedule)
தேர்வர்களின் நலன் கருதி, தெரிவு அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வின் அடுத்த நிலை தொடர்பான தகவல்கள்தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம் தெரிவு அட்டவணையில் குறிப்பிடப்பட்டு, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகள் - தொகுதி – 1, 2, 2ஏ மற்றும் IV பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு பதவிகள்) ஆகிய தேர்வுகளின் முடிவுகள், தெரிவு அட்டவணையில் குறிப்பிடப்பட்ட மாதத்தில் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளன.
சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் முறை:
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் முறையை எளிமைப்படுத்த, அரசு இ-சேவை மையங்கள் மூலம் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யமுடியும் என்ற நடைமுறை மாற்றியமைக்கப்பட்டு, தேர்வர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்களுக்கு தகவல்களை வழங்குதல்:
தேர்வர்கள் எளிதாக பாடத்திட்டங்கள் தொடர்பான விவரங்களை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் விதமாக, 120 பாடத் தாள்களுக்கான பாடத்திட்டங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் மற்றும் தொழில்நுட்பப்பணிகளுக்கான தேர்வுத்திட்டங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்களுக்கு தேர்வு தொடர்பான துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கும்பொருட்டு தேர்விற்கான அறிவிக்கையின் வடிவம் ((notification format) மாற்றியமைக்கப்பட்டு, வெவ்வேறு பதவிகளுக்கான தகுதி நிபந்தனைகள், தேர்வு நடைமுறை (plan of examination) இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை, சிறப்பு பிரிவினர்களுக்கான சலுகைகள் மற்றும் இடஒதுக்கீடு, சான்றிதழ்களின்படிவங்கள், பாடத்திட்டம், மற்றும் தேர்வு எழுதும்போது தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்வர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் ததவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் மற்றும் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டு, தகவல்கள் தேர்வர்களுக்கு விரைவாக வழங்கப்பட்டு வருகிறது’’.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.