TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி, கணினி தேர்வு, முடிவுகள்- முழு விவரம்
TNPSC Group 4 Exam Highlights: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி, கணினி வழியிலான தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
![TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி, கணினி தேர்வு, முடிவுகள்- முழு விவரம் TNPSC Press Meet Group 4 Exam Highlights, Exam Date, Last Date to Apply CBT Test, Result- Key Points TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி, கணினி தேர்வு, முடிவுகள்- முழு விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/29/35fc9a6646c055f86b2028abcbc11616_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி, கணினி வழியிலான தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:
ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. அனைத்து இடங்களும் தேர்வு நடத்தப்படும். 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும்.
200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்: குரூப் 4 தேர்வு முறை எப்படி?
ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சம் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும்.
தேர்வு முடிவுகள்
அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். நவம்பர் மாதத்தில் நேர்காணல் நடத்தப்படும்.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை
ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும். டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
கணினி வழியில் தேர்வை (CBT) நடத்தவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை விரைந்து அறிவிக்கவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)