TNPSC Group 4 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; காண்பது எப்படி?
TNPSC Group 4 Exam Hall Ticket 2024: தேர்வர்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வரை, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். தொடர்ந்து அவர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியீடு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதைக் காண்பது எப்படி என்று காணலாம். தேர்வர்கள் tnpsc.gov.in மற்றும் இணையதளங்களை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம். tnpscexams.in
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களும் இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம்.
தொடர்ந்து கடந்த மாதம் 2023ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த நிலையில் தேர்வர்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வரை, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். தொடர்ந்து அவர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
Posts included in Combined Civil Services Examination - IV (Group-IV Services) (Notification No.01 / 2024, dated: 30.01.2024) – Hall ticket hosted in https://t.co/Tm3Oywzaw9 and https://t.co/h98HJ8a69k
— TNPSC (@TNPSC_Office) May 27, 2024
For details, click:- https://t.co/sNu36rCcQf pic.twitter.com/3b5v7dYLSL
ஹால் டிக்கெட் பெறுவது எப்படி?
* தேர்வர்கள் tnpsc.gov.in மற்றும் இணையதளங்களை க்ளிக் செய்ய வேண்டும். tnpscexams.in
அல்லது https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் ஒரு முறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
* உங்களின் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
இதுதொடர்பான டிஎன்பிஎஸ்சி அறிவிக்கையைக் காண: https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/73-2024%20Press%20Release.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு: tnpsc.gov.in