TNPSC Group 4 Mock Test: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வு; கலந்துகொள்வது எப்படி?
TNPSC Group 4 Exam Mock test: Dr.அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் வருகிற 2.6.2024 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட உள்ள மாதிரி தேர்வில் கட்டணமின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம்,
Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான இலவச மாதிரித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூன் 9ஆம் தேதி தேர்வு
தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 2023ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வர்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வரை, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கான ஹால் டிக்கெட் அண்மையில் வெளியிடப்பட்டது.
இலவச மாதிரித் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஜூன் அன்று நடத்த இருக்கும் Group- 4 போட்டித் தேர்வினை எதிர்கொள்ள உள்ள தேர்வர்களுக்கு Dr. அம்பேத்கர் பயிற்சி மையம் இலவச மாதிரித் தேர்வினை நடத்த உள்ளது. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தங்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு நகலுடன் (Hall ticket Xerox copy) கலந்து கொள்ளலாம்.
Dr. அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் வருகிற 2.6.2024 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட உள்ள மாதிரி தேர்வில் கட்டணமின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம், இம்மாதிரித்தேர்வு முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. நேரம் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை.
மாதிரித் தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் ஹால் டிக்கெட் ஜெராக்ஸ் காப்பியினை கட்டாயம் கொண்டு வர வேண்டும். விருப்பம் உள்ள மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்று தனது இறுதி கட்ட தயாரிப்பின் மீதான வெற்றியை உறுதி படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள தெரிவித்துக் கொள்கின்றோம்.
அணுக வேண்டிய முகவரி
Dr.அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம்,
எண். 6/ 9, கச்சாலீஸ்வரர் அஹ்ராஹரம், ஆர்மேனியன் தெரு, சென்னை- 1.
தொடர்பு கொள்ள: 94446 41712- வாசுதேவன்
63698 74318 - அமலா
Location
https://maps.app.goo.gl/U1BUZL6RgnnkDhg9A?g_st=aw
முன்பதிவு செய்ய
https://forms.gle/tWuWC9ZSjxboPeCZ9
இவ்வாறு Dr. அம்பேத்கர் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.