Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பி, குரூப் 1 சி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.
தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3, குரூப் 4 என ஒவ்வொரு வகையான பணி இடங்களுக்கும் வெவ்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஜூலை 12ஆம் தேதி குரூப் 1 பி, 1 சி தேர்வு
அந்த வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரி பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதற்கு மே இறுதி வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று பிற்பகலில் நடைபெற உள்ளது. கணினி வழியில் கொள்குறித் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் செய்யும் தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
முழுமையாக விவரங்களை அறிய https://tnpsc.gov.in/Document/english/05_2024_ENG_.pdf என்ற அறிவிக்கையைக் காணலாம். இதில் தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
முதல்நிலைத் தேர்வு
பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரத்தில்) – 175 கேள்விகள்
திறனாய்வு மற்றும் மனத்திறன் தேர்வு – 25 கேள்விகள்
- கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
முதன்மைத் தேர்வு
உதவி ஆணையர் பதவிக்கு
முதல் தாள் - தமிழ் தகுதித் தேர்வு (10ஆம் வகுப்புத் தரம்) – 100 மதிப்பெண்கள்
இரண்டாம் தாள் – பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரம்)- – 250 மதிப்பெண்கள்
மூன்றாம் தாள் – இந்து சமயம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள்
4ஆம் தாள் – சட்டம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள்
மொத்தம் – 750 மதிப்பெண்கள்
நேர்காணல் – 100 மதிப்பெண்கள்
கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/