மேலும் அறிய

TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!

 இதற்கு அடிப்படைத் தகுதியாக இளநிலை பொறியியல் படிப்பு அல்லது எம்பிஏ படிப்பு மற்றும் பணி அனுபவம் கோரப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (செப்.28) கடைசித் தேதி ஆகும். 

நேர்காணல் அல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான 861 பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் 105 இடங்களுக்கு நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 30ஆம் தேதி  தொடங்கியது. தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்க இன்றே (செப்டம்பர் 29ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

அடிப்படைத் தகுதி என்ன?

முன்னதாக நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தகுதியாக டிப்ளமோ, ஐடிஐ தரத்திலான படிப்புகள் கூறப்பட்டிருந்த நிலையில், நேர்காணலுடன் கூடிய இந்தத் தேர்வு, மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட மேலாண்மை ரீதியிலான பணியிடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது. இதற்கு அடிப்படைத் தகுதியாக இளநிலை பொறியியல் படிப்பு அல்லது எம்பிஏ படிப்பு மற்றும் பணி அனுபவம் கோரப்பட்டுள்ளது. 

தேர்வு நடத்தப்படுவது எப்படி?

இவர்களுக்காக இரண்டு தாள்களுக்குத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முதல் தாளில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு, பொது அறிவு, மனத் திறன் அறிவு ஆகிய தேர்வுகளும் 2ஆவது தாளில், பாடம் தொடர்பான தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு இறுதியாக நேர்காணல் நடத்தப்படும்.

TNPSC Notification: <a title=டிஎன்பிஎஸ்சி அடுத்த அறிவிப்பு; நேர்காணல் கொண்ட தொழில்நுட்ப பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?" width="720" />

10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / டிப்ளமோ / பட்டம் / முதுகலை பட்டம் / ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் / Ph.D பட்டம் / தற்காலிக பட்டம் அல்லது தற்காலிக டிப்ளமோ சான்றிதழ் / பட்டத்துடன் ஒருங்கிணைந்த மதிப்பெண் தாள் அல்லது தற்காலிக பட்டப்படிப்புச் சான்றிதழ் ஆகியவை கல்வித் தகுதிக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அதேபோல சென்னை, சேலம், கோவை, தூத்துக்குடி, ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கரூர், வேலூர், மதுரை, விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

தேர்வர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும் சிறப்புப் பிரிவினர் இந்தக் கட்டணத்தைச் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்கள், வயது வரம்பு, விண்ணப்பிப்பதற்கான தகுதி, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் காண https://www.tnpsc.gov.in/Document/english/CTSE%20INTERVIEW%20POSTS-ENGLISH_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
Fire cracker Accident: சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Embed widget