மேலும் அறிய

TNEA Admission 2024: இன்னும் சில நாட்கள்தான்; பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர இணையம் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசித் தேதி ஆகும்.   

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு, ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே 2024 -ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகே, பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் மே 6ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அன்றே விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இதுவரை 2.32 லட்சம் மாணவர்கள், பொறியியல் படிப்புகளில் பதிவு செய்துள்ளனர்.  அரசு, அரசு உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர, மாணவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசித் தேதி ஆகும்.   

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் https://www.tneaonline.org/user/login அல்லது http://www.dte.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

 முக்கியத் தேதிகள் என்னென்ன?

மாணவர்கள் அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - 12.06.2024

ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் ஒதுக்கப்படும் நாள் - 12.06.2024

சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் நாட்கள் (இணையதள வாயிலாக) - 13.06.2024 முதல் 30.06.2024 வரை

தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 10.07.2024

சேவை மையம் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்தல் - 11.07.2024 முதல் 20.07.2024 வரை

எவ்வளவு பேர் விண்ணப்பம்?

பொறியியல் படிப்புகளில் சேர, மே 6ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2,32,417 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 1,83,737 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். இதில் 1,53,088 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதி வரை உள்ள நிலையில், விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

கூடுதல் விவரங்களுக்கு...

தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110

இ- மெயில் முகவரி: tneacare@gmail.com

கூடுதல் விவரங்களுக்குhttps://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
Embed widget