மேலும் அறிய

TN TRB Exam | அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி.. தேர்வு அறிவிப்பு விவரங்கள் இங்கே..

தேர்வுக்குரிய அட்மிட் கார்டு தேர்வுக்கு முந்தைய வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கு பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையங்களை அமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம்  முடிவெடுத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு,  2017-2018-ஆம் ஆண்டிற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை  (எண்.14/2019) ஆசிரியர் தேர்வு மையம் வெளியிட்டது. இத்தேர்விற்கான ஆன்லைன் வழித் தேர்வு 28.10.2021, 29.10.2021, 30.10.2021,  31.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, சில தேர்வு மையங்களை மாற்ற விரும்புவதாக, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடத்தொடங்கினர். இதனையடுத்து,தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இம்மாதம் 10-ஆம் தேதி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டன. டிசம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை போட்டித் தேர்விற்கான கால அட்டவனையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இருப்பினும், இந்த கால அட்டவணையும் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை ((Availability of Examination Centre) மற்றும் மற்றும் நிவாக வசதியினைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டது.  

மேலும், தேர்வுக்குரிய அட்மிட் கார்டு தேர்வுக்கு முந்தைய வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN TRB Exam | அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி.. தேர்வு அறிவிப்பு விவரங்கள் இங்கே..  

இதற்கிடையே, ஆசிரியர் வாரியம் நடத்தும் விரிவுரையாளர் பணிக்கான கணிவழித் தேர்வுக்கான மையங்களை அமைக்க பொறியியல் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரி நிர்வாகிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.                       

மொத்தம் 1060 பணியிடங்களுக்கான அறிவிப்பில், சிவில் – 112, மெக்கானிக்கல் -219, EEE-91, ECE – 119, ICE – 3, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் -135, IT – 6 , புரொடெக்ஷன் இன்ஜினியரிங் 6, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் 6, பிரிண்டிங் டெக்னாலாஜி -6, ஆங்கிலம் -88, கணிதம் – 88, இயற்பியல் -83, வேதியியல் -84, மாடர்ன் ஆபீஸ் பிராக்டிஸ் (Modern Office Practice) -17 என பல்வேறுத் துறைகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

மேலும், வாசிக்க: 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: தேதியை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்! 

TN College Exam: கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வி துறை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget