மேலும் அறிய

TET Exam: 188 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாள் தொடங்கியது; சிசிடிவி மூலம் கண்காணிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழித்தேர்வானது இன்று (பிப்ரவரி 3 ஆம் தேதி) பலத்த முன்னேற்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழித்தேர்வானது இன்று (பிப்ரவரி 3 ஆம் தேதி) பலத்த முன்னேற்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 188 இடங்களில் கணினி வசதியுடன் கூடிய மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. 

ஆசிரியர் தகுதித் தேர்வு

அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

1 ஆம் தாள் தேர்வு

இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2-க்கு 4,01,886 பேரும்‌ என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌.

அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். 

TET Exam: 188 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாள் தொடங்கியது; சிசிடிவி மூலம் கண்காணிப்பு

தேர்வு தேதி அறிவிப்பு

இதற்கிடையே ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வானது பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என  கால அட்டவணை அண்மையில் வெளியானது. முதல்கட்டத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி வரையிலும் 2-ம் கட்டத் தேர்வு பிப்ரவரி 10 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

தேர்வு தொடங்கியது

இதைத் தொடர்ந்து 2ஆம் கட்டத் தேர்வு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று (பிப்ரவரி 3 ஆம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 188 இடங்களில் கணினி வசதியுடன் கூடிய மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. சேலத்தில் அதிகபட்சமாக 14 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி, கன்னியாகுமரியில் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத 4,01,856 பேர் தகுதி பெற்றனர். தேர்வு நடைபெறுவதை, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து நேரடியாக சிசிடிவி காட்சிகள் மூலம் இணை இயக்குநர்கள் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதையும் வாசிக்கலாம்: Bihar Student Fainted: 50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வெழுதச் சென்ற பிளஸ் 2 மாணவர்; மருத்துவமனையில் அனுமதி- என்ன காரணம்? https://tamil.abplive.com/news/india/bihar-news-male-student-faints-after-finding-himself-among-50-girls-in-exam-centre-check-more-details-99524

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget