12th Cut-Off Marks: வெளியான பிளஸ் 2 முடிவுகள்; உயரும் கட் ஆஃப் மதிப்பெண்- எந்தெந்தப் படிப்புகளுக்கு? எவ்வளவு?
12th Cut Off Marks 2025: பொறியியல் உள்ளிட்ட அறிவியல் பாடப் பிரிவுகளில் உயர் கல்வி படிப்புகளில் சேர கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியான நிலையில், ஒட்டுமொத்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் அறிவியல் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி விகிதமும் சதங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. அதே நேரத்தில் வணிகவியல் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில், பொறியியல் உள்ளிட்ட அறிவியல் பாடப் பிரிவுகளில் உயர் கல்வி படிப்புகளில் சேர கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் ஏபிபி நாடுவிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர கட் – ஆஃப் கட்டாயம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வேதியியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல 95 முதல் 99 வரை மதிப்பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும்.
இதன்படி,
195-க்கும் மேலே கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு 0.5 கட் ஆஃப் அதிகரிக்கலாம்.
அதேபோல,
190-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள்- 1 முதல் 1.5 வரை கட் ஆஃப்
180-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் – 2 முதல் 2.5 வரை கட் ஆஃப்
170-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் – 3.5 கட் ஆஃப்
160-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் – 4 முதல் 4.5 வரை கட் ஆஃப்
150-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் - 6 முதல் 7 வரை கட் ஆஃப்
140-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் - 7 முதல் 8 வரை கட் ஆஃப்
120-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் -10 கட் ஆஃப்
பிற படிப்புகளுக்கு எப்படி?
அதேபோல கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேரவும் 2025ஆம் கல்வி ஆண்டில், கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 முதல் 1 வரை கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 195-க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே பிசி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.
வேளாண்மைப் படிப்புகளில் சேரவும் கட் ஆஃப் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 1 முதல் 1.5 வரை உயரலாம் எனவும் Fishery, துணை மருத்துவப் படிப்புகளில் சேரவும் கட் ஆஃப் உயரும் என்று கணிக்கப்படுகிறது.
கட் அஃப் குறையும் படிப்புகள்
வணிகவியல், கணக்கியல், பொருளாதாரப் பாடப் பிரிவுகளில் சதம் அடித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதனால் இந்த ஆண்டில். பி.காம், பிபிஏ, பி.ஏ. படிப்புகளுக்கு கட் ஆஃப் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.























