TN 11th Exam Results: பிளஸ் 1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி; வழக்கம்போல மாணவிகளே அதிகம்!
TN 11th Exam Results 2024: 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைத் தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட நிலையில், மாணவர்கள் 91.17% பேர் தேர்ச்சிஅடைந்துள்ளனர்.
11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைத் தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட நிலையில், மாணவ - மாணவிகள் மொத்தம் 91.17% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள், http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்.
11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8,11,172 பேர் எழுதிய நிலையில், தேர்வில் 7,39,539 (91.17% ) பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 4.04 லட்சம் மாணவிகள் மற்றும் 3.35 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் 7.43 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3432 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாகத் தேர்ச்சி விகிதம்
இந்த நிலையில், 96.02 சதவீதத் தேர்ச்சியோடு கோவை மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன. குறிப்பாக 95.56% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடம் பெற்றுள்ளது. 95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3-வது இடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் 81.40 ஆகும்.
பள்ளி வாரியாகத் தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 85.75 ஆக உள்ளது. தனியார் பள்ளிகளில் 98.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 92.36 சதவீதம் பேர் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இருபாலர் பள்ளிகளில் 91.61 % பேரும் பெண்கள் பள்ளிகளில், 94.46% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் ஆண்கள் பள்ளியில் தேர்ச்சி வீதம் 81.37 எனக் குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்ச்சி 91.17 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.24 சதவீதம் அதிகம் ஆகும். 2023ஆம் ஆண்டு, 90.93 சதவீதம் பேர் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
கூடுதல் விவரங்களுக்கு: http://dge.tn.gov.in