மேலும் அறிய
Advertisement
Sivagangai: ஆட்டோ ஓட்டுனர் மகள் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம்.. மானாமதுரை எம்எல்ஏ வாழ்த்து
பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு மாணவியின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து இனிப்புகள் வழங்கி கொடுத்து கொண்டாடினார்.
2022- 23ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் சுமார் 9,14, 320 மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் நடைபெற்ற நிலையில், இப்பணியில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மேலும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நிறைவடைந்து முதலில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அதன்பின்னர் தேர்வு முடிவு தேதி மே 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனர் மகள் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவிக்கு மானாமதுரை எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீயூ வசந்த நகரில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் விஜயக்குமார், ஜெகதா தம்பதியினர் மகள் இலக்கியா. மானாமதுரை அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் 500க்கு 493மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 97 என ஒட்டுமொத்தமாக 493 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதை கொண்டாடும் விதமாக பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு மாணவியின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து இனிப்புகள் வழங்கி கொடுத்து கொண்டாடினார். பின்னர் மானாமதுரை எம் எல் ஏ தமிழரசியிடம் சென்று வாழ்த்து பெற்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காவல்துறையிடம் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்துக்கு அனுமதி - முதல்வர் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion