மேலும் அறிய

TRB Notification: ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? 10 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை- அன்புமணி!

ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ்,5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர் தேர்வு அறிவிக்கை வெளியிடாதது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ்,5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர் தேர்வு அறிவிக்கை வெளியிடாதது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்துப் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான  தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் 5 மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை  ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை. கல்வி சார்ந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஜனவரி மாதம்  வெளியிடப்படும்; வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதமும், 6553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிவிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும்; பட்டதாரி ஆசிரியர்கள்  3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், மே மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஓர் அறிவிக்கைகூட வெளியாகவில்லை.

மார்ச் மாதம் வரை வெளியிடப்பட வேண்டிய ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படாததைச் சுட்டிக் காட்டி கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 3ஆம் நாள் செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அப்போதைய பொறுப்புத் தலைவர் நந்தகுமார், மே மாதத்தில் ஆசிரியர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அவர் மாற்றப்பட்டு, முழு நேரத் தலைவர் நியமிக்கப்பட்ட பிறகும் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா?

ஆசிரியர் தேர்வு வாரியம் 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 15,149 பேரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருந்தது. அவர்களில் 5 வகையான பணிகளுக்கு 14,656 பேரை, அதாவது 97 விழுக்காட்டினரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகள் மே மாதத்திற்குள்ளாக வெளியிடப்பட்டு  இருக்க வேண்டும். அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் என சுமார் 11,000 பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி முடிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான தொடக்கக்கட்ட பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்றால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா அல்லது உறங்குகிறதா?

அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை கடந்த சில ஆண்டுகளாகவே நிரப்பப்படாததால் கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து ஒரு வாரத்திற்குள் அரசு பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஏற்பாடுகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை என்றால் நடப்பாண்டும் பற்றாக்குறை ஆசிரியர்களுடன்தான் அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்பட வேண்டும். அப்படியானால் கல்வித் தரம் எவ்வாறு உயரும்?

கல்வித்தரத்தை உயர்த்துவோம் என்பது நகைச்சுவை

தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படவில்லை. 2013- 14ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும்  தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும்  ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித்தரத்தை உயர்த்துவோம் என்பது நகைச்சுவையாகவே இருக்கும்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே கல்வித் தரத்தை உயர்த்த முடியும். தமிழ்நாட்டில் 3800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன. தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்   இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு இணையாகக் கூட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது தமிழ்நாட்டு அரசு பள்ளிகளின் கல்விச்சூழலை சீரழிக்கும்.

சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியை மேம்படுத்த முடியாது. இந்த அடிப்படையை உணர்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் என்பது தகுதித்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்; கவுரவ விரிவுரையாளர்கள், பகுதி நேர மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு  பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
Robo Shankar :
Robo Shankar : "ஒன்ஸ்மோர் கேட்டு கலவரம் பண்ணேன்..கமல் ஓங்கி அடிச்சுட்டார்..." ரோபோ சங்கர் ஓப்பன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
Robo Shankar :
Robo Shankar : "ஒன்ஸ்மோர் கேட்டு கலவரம் பண்ணேன்..கமல் ஓங்கி அடிச்சுட்டார்..." ரோபோ சங்கர் ஓப்பன் டாக்
Breaking News LIVE 7th NOV 2024:  12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Breaking News LIVE 7th NOV 2024: 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Soorasamharam 2024: களைகட்டும் சூரசம்ஹார நிகழ்வு; பழனியில் சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்
களைகட்டும் சூரசம்ஹார நிகழ்வு; பழனியில் சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Embed widget