மேலும் அறிய

TANCET 2022 Results : டான்செட் தேர்வு முடிவுகள் எப்போது? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். டான்செட் (TANCET - Tamil Nadu Common Entrance Test) தேர்வெழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 

தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும்  அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில்,  டான்செட் தேர்வுக்கு மொத்தம் 36,710 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் எம்பிஏ படிப்பில் சேர 21,557 பேரும், எம்சிஏ படிப்பில் சேர 8,391 பேரும் விண்ணப்பித்தனர். அதேபோல முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர 6,762 பேர் விண்ணப்பித்தனர். 

தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மே 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்கள் மே 2 முதல் மே 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்தனர். 

TANCET 2022 Results : டான்செட் தேர்வு முடிவுகள் எப்போது? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

இதையடுத்து டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற்றது. குறிப்பாக எம்சிஏ படிப்பிற்கு மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது. எம்பிஏ படிப்பிற்கு மே 14-ஆம் தேதி மதியம் 2:30 முதல் மாலை 4:30  மணி வரை தேர்வுகள் நடைபெற்றன. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது.

இந்த நிலையில் டான்செட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூன் 10ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக டான்செட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: 044-22358289 / 044-22358314 (10.00 AM to 6.00 PM)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
TN Chief Secretary : ‘புதிய தலைமைச் செயலாளருக்கு கடும் போட்டி’ ராஜேஸ் லக்கானிக்கு எதிராக பெரிய லாபி..!
‘தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார்?’ லாபி செய்யும் அதிகாரிகள்..!
EPS: ”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
TN RAIN ALERT : இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Embed widget