மேலும் அறிய

CUET UG EXAM: CUET தேர்வுக்குவிண்ணப்பதில் தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல்: காரணம் என்ன?

CUET EXAM: மத்திய பல்கலைக்கழங்களில் சேர்வதற்கான CUET தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

CUET UG EXAM: மத்திய பல்கலைக்கழங்களில் சேர்வதற்கான CUET தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனால் மாணவர்கள் செய்வது அறியாமல் திணறி வருகின்றனர். 

புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இணைந்து படிப்பதற்கு CUET (Common University Entrance Test) எனும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதால் அதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. அதனையடுத்து  Common University Entrance Testல் விண்ணப்பிக்க பத்தாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை கட்டாயம் நிரப்ப வேண்டும் என உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை என்பதால், மாணவர்கள்  Common University Entrance Testக்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை எப்படி நிரப்புவது என தெரியாமல் திணறி வருகின்றனர். 

இதற்கு முன்னர், ஜே.இ.இ தேர்விலும் தமிழ்நாடு மாணவர்களுக்கு இதுபோன்ற சிக்கல் எழுந்த நிலையில், விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது  Common University Entrance Testல் இது போன்ற சிக்கல் எழுந்துள்ளதால் இதிலும் தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், வரும் மார்ச் 12ஆம் தேதி CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

CUET இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான தேர்வுகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் UG மற்றும் PG படிப்புகளில் சேர்வதற்காக இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. CUET இன் முழு வடிவம் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு. CUET UG தேர்வு 2022 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த அகில இந்திய அளவிலான தேர்வாகும். CUET தேர்வில் 90க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. CUET ஆனது இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கைக்கான நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒரே தேர்வை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

CUET முழு படிவம்

CUET முழு வடிவம் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வைக் குறிக்கிறது . இத்தேர்வு மத்திய பல்கலைக்கழகங்களின் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை திட்டங்களில் சேர்க்கைக்காக மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) நடத்தும் பொறுப்பு தேசிய தேர்வு முகமையிடம் (NTA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில்  மாணவர் சேர்க்கையைப் பெறுவதற்கு ஒற்றை வாய்ப்பை வழங்குவதே நுழைவாயிலின் முக்கிய நோக்கமாகும்.

மிக முக்கியமாக, CUET தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மற்றும் பிற தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பொதுவான தளத்தையும் சம வாய்ப்புகளையும் வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் பல்கலைக்கழகங்களுடனான தொடர்பை வளர்த்துக் கொள்வார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், அதனை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்துள்ளது. மேலும், மாநில பல்கலைக்கழங்களில் தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாது எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Embed widget