மேலும் அறிய

Teachers Transfer Counselling: ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு; புதிய தேதிகள் அறிவிப்பு- விவரம்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை (மே 26) நடைபெறுவதாக இருந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காகப் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, முறையே நாளை (மே 26), மே 29ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காகப் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 8 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதற்காக ஏற்கெனவே ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழலில்  நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது.

இதற்கிடையே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. எனினும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு  நாளை (மே 26) நடைபெறுவதாக இருந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காகப் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவித்து உள்ளதாவது:

2022- 2023 ஆம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகள்‌ சார்பாக திருத்திய கால அட்டவணைகள்‌ வெளியிடப்பட்டது.

தற்போது தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌ சார்பாக கீழ்க்காணும்‌ திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெறும்‌ என்பதை அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ (தொடக்கக்‌ கல்வி) தெரிவிக்கப்படுகிறது. 

திருத்திய கலந்தாய்வு அட்டவணை

வரிசை எண்‌ இயக்ககம்‌  பதவி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு நாள் திருத்திய கலந்தாய்வு தடைபெறும்‌ நாள் & கிழமை
1 தொடக்கக் கல்வி இயக்ககம்  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு
26.05.2023  வெள்ளி
 29.05.2023 திங்கள்‌
2 தொடக்கக் கல்வி இயக்ககம் இடைநிலை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு ( ஒன்றியத்திற்குள்‌)

 29.05.2023  திங்கள்‌

‌30.05.2023 செவ்வாய்

இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: UPSC Result 2022: கால்கள் இல்லை; 3 விரல்தான்! அதனால் என்ன?- யுபிஎஸ்சி தேர்வில் வென்ற இளைஞரின் உத்வேகக் கதை 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget