மேலும் அறிய

School Reopening SOP : போதைப்பொருள் எதிர்ப்பு: பள்ளிகள் திறப்பில் எதற்கெல்லாம் முக்கியத்துவம்? வழிகாட்டல் வெளியீடு

காலை வணக்கக்‌ கூட்டத்தில்‌ 6 முதல்‌ 12 வகுப்பு உள்ள பள்ளிகளில்‌ போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள்‌/கருத்து பரிமாற்றம்‌ சார்ந்து பேச்சு/கவிதை/ சுவரொட்டி/ நாடகம்‌/ பாட்டு/ கதைகள்‌ இடம்பெற உள்ளது.

2024- 2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ ஜூன்‌ 6ம்‌ தேதி திறக்கப்பட உள்ள நிலையில்‌ பள்ளிகள்‌ திறக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இக்கல்வியாண்டில்‌ செயல்படுத்தப்பட வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌, கல்வி சாராச்‌ செயல்பாடுகள் குறித்து பின்வரும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அனைத்துக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளித்‌ தூய்மைப்‌ பணிகள்‌

* பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள்‌, தலைமை ஆசிரியர்‌ அறை, ஆய்வகம்‌, கழிப்பறைகள்‌ உள்ளிட்ட பிற அறைகள்‌ மற்றும்‌ வளாகம்‌ நன்கு தூய்மைப்படுத்தப்பட் டு இருப்பதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.

* வகுப்பறைகள்‌, தலைமை ஆசிரியர்‌ அறை மற்றும்‌ பிற அறைகளிலுள்ள தளவாடப்‌ பொருட்கள்‌, கதவு மற்றும்‌ ஜன்னல்கள்‌, கற்றல்‌ கற்பித்தல்‌ உபகரணங்கள்‌ ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌. காலாவதியான ஆய்வகப்‌ பொருட்களை முறைப்படி பதிவேட்டில்‌ பதிவு செய்து நீக்கம்‌ செய்திட வேண்டும்‌.

* பள்ளிக்‌ கட்டிடத்தின்‌ மேற்பரப்பில்‌ சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர்‌ வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும்‌, மழைநீர்‌ சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்‌ செய்யப்பட்டு பயன்பாட்டில்‌ இருப்பதையும்‌ உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.

 கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம்‌

* மாணவர்‌ பயன்பாட்டிற்கான குடிநீர்த்‌ தொட்டி மற்றும்‌ மேல்நிலை நீர்த்‌ தேக்கத்‌ தொட்டி அனைத்தையும்‌ உட்புறம்‌ கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம்‌ செய்து, தூய்மையாகவும்‌ பாதுகாப்பான குடிநீர்‌ மாணவர்களுக்கு கிடைக்கும்‌ வகையில்‌ உள்ளதை உறுதி செய்திட வேண்டும்‌.

* சமையலறை நன்கு சுத்தம்‌ செய்யப்பட்டும்‌ சமையல்‌ பாத்திரங்கள்‌ முறையாக கழுவப்பட்வ்டும்‌ பயன்படுத்துவதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.

*  பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பயன்பாடற்ற பொருட்கள்‌ இருப்பின்‌அப்புறப்படுத்துதல்‌ அவசியம்‌. இவைகளை விதிகளின்படி எலம்‌ விட நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

*  திறந்தவெளிக்‌ கிணறுகள்‌ இருப்பின்‌ அதன்‌ மேற்பரப்பினை யாரும்‌ அணுகா வண்ணம்‌ மூடிட நடவடிக்கை எடுப்பதுடன்‌ பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்நடவடிக்கைகளை நிறைவு செய்யப்பட வேண்டும்‌.

*  கழிவுநீர்த்‌ தொட்டிகள்‌ மூடப்பட்டு பாதுகாப்புடன்‌ இருப்பதை உறுதி செய்யவேண்டும்‌.

*  பள்ளி வளாகம்‌ முழுவதும்‌ குப்பைகளின்றி தூய்மை செய்யப்படுவதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌

*  பள்ளியில்‌ மாணவர்கள்‌ பயன்படுத்தும்‌ அனைத்து இடங்களும்‌ கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌

*  பள்ளி வளாகத்தில்‌ உள்ள அனைத்துக்‌ குழந்தைகளும்‌ பாதுகாப்பாகப்‌ பயில தேவையான அனைத்து நடவடிக்கைகளும்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

பள்ளி பாதுகாப்பு முன்னேற்பாடுகள்‌

* பள்ளி வளாகத்தினுள்‌ மாணவர்களின்‌ முழுமையான பாதுகாப்பிற்கு பள்ளியின்‌ தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ அனைத்து ஆசிரியர்களும்‌ முழுப்‌ பொறுப்பு என்பதனை உணர்ந்து செயலாற்றிட வேண்டும்‌.

*  பள்ளித்‌ தலைமையாசிரியர்‌, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்‌ மற்றும்‌ பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழக உறுப்பினர்களுடன்‌ கலந்தாலோசித்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்‌.

*  பள்ளி வளாகத்தில்‌ பழுதடைந்த கட்டிடங்கள்‌ அல்லது உடைந்து விழும்‌ நிலையில்‌ சுற்றுச்சுவர்‌ எதேனும்‌ இருப்பின்‌, அத்தகைய கட்டிடங்களை மாணவர்கள்‌ அணுகாத வகையில்‌ உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.

*  மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பயன்பாட்டில்‌ உள்ள கழிவறைகளின்‌ உள்ளேயும்‌ வெளியேயும்‌ கைகளை சுத்தம்‌ செய்வதற்கு ஏற்ற வகையில்‌ போதுமான அளவில்‌ சோப்பு / சோப்பு கரைசல்‌ வைக்கப்பட்டுப்‌ பயன்பாட்டில்‌ இருப்பதை உறுதி செய்திட வேண்டும்‌.

* பள்ளியில்‌ உள்ள அனைத்து மின்சாதனங்கள்‌ மற்றும்‌ மின்சுவிட்சுகள்‌நன்முறையில்‌ செயல்படுகின்றதா என்பதை தலைமையாசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ மூலம்‌ உறுதி செய்திடல்‌ வேண்டும்‌ .

* பள்ளி வளாகத்தினுள்‌ அமைந்துள்ள மரங்களில்‌ ஒடிந்த கிளைகள்‌ மற்றும்‌ கட்டிடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதுடன்‌ மரங்கள்‌ எளிதில்‌ விழாத வண்ணம் உள்ளதை உறுதிபடுத்திட வேண்டும்‌.

போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள்‌

தலைமை ஆசிரியர்‌, உதவித்‌ தலைமையாசிரியர்‌ முன்னிலையில்‌ காலை வணக்கக்‌ கூட்டம்‌ நடைபெறுதல்‌ வேண்டும்‌. காலை வணக்கக்‌ கூட்டத்தில்‌ மாணவர்களைத்‌ தவறாமல்‌ கலந்து கொள்ளச்‌ செய்ய வேண்டும்‌.

* ஒவ்வொரு வாரமும்‌ செவ்வாய்க்‌ கிழமை அன்று காலை வணக்கக்‌ கூட்டத்தில்‌ 6 முதல்‌ 12 வகுப்பு உள்ள பள்ளிகளில்‌ போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள்‌/கருத்து பரிமாற்றம்‌ சார்ந்து பேச்சு/கவிதை/ சுவரொட்டி/ நாடகம்‌/ பாட்டு/ திருக்குறள் கதைகள்‌ இடம்பெறலாம்‌’’.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
மாமியார் வீட்டுக்கே சென்று தலையை உடைத்த மருமகன்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மாமியார் ! என்ன நடந்தது?
மாமியார் வீட்டுக்கே சென்று தலையை உடைத்த மருமகன்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மாமியார் ! என்ன நடந்தது?
Teachers Vacancy: ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்திடுக: தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
Teachers Vacancy: ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்திடுக: தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
Embed widget