TN Engineering Counselling: பொறியியல் கலந்தாய்வு ஆக.2-ல் தொடக்கம்; யார் யாருக்கு எப்போது?- முழு விவரம்
பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குகிறது. 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குகிறது. 5ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்குப் பிறகு, பொதுப் பிரிவினருக்கு 7ஆம் தேதி தொடங்குகிறது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தக் கலந்தாய்வு செப்டம்பர் 24 வரை நடைபெற உள்ளது.
முதலாம் ஆண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க். பட்டப் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு, தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்,அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு நடைபெறத் தொடங்கி உள்ளது.
மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜூன் 7ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஜூன் 12 முதல் 30ஆம் தேதி வரை டிஎஃப்சி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. குறைதீர்ப்பு முகாம்கள் ஜூலை 13 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
சிறப்புப் பிரிவு கலந்தாய்வு
பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்குப் பிறகு, பொதுப் பிரிவினருக்கு 7ஆம் தேதி தொடங்குகிறது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தக் கலந்தாய்வு செப்டம்பர் 24 வரை நடைபெற உள்ளது.
துணைக் கலந்தாய்வு எப்போது?
பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.
விண்ணப்ப பதிவுக் கட்டணம்
பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள், " “The Secretary TNEA” payable at Chennai.. என்ற பெயரில் இன்று முதல் வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம்- ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி- ரூ.500
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி- ரூ.250.
கூடுதல் விவரங்களுக்கு:
தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்: 1800 - 425 - 0110
இ- மெயில் முகவரி: tneacare@gmail.com