மேலும் அறிய

TN Exams: கொளுத்தும் வெயில்; தொடக்கநிலை வகுப்புகளுக்கு தாமதமாகும் தேர்வு? - பொங்கிய அன்புமணி

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளுக்குத் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளுக்குத் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கமான கோடை வெயில் தன் உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆவது வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் வகுப்புகளுக்கே பொதுத் தேர்வுகள் தொடங்கி முடிவடைய உள்ள நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளுக்குத் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி உள்ளதாவது:

’’தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்ட நிலையிலும், ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் வாடுகின்றனர்!

ஏப்ரல் 15-ஆம் நாளுக்குப் பிறகு தான் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் கடைசி வாரத்தில் தான் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்குமானால்,  இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல் இருக்க முடியாது!

11, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த சில நாட்களில் நிறைவடைகின்றன. பத்தாம் வகுப்புக்கு வரும் 6-ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது.  உயர் வகுப்புகளுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு தொடங்கிய நிலையில் தொடக்க நிலை வகுப்புகளுக்கு தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன்?

ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தி, ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறை முன்வர வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தேர்வு மூலம் மாணவர்களை மதிப்பிட வேண்டிய அவசர, அவசியம் என்ன? வெயில் காலத்தில் இறுதித் தேர்வுகள் அவசியமா? என்றும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.  

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
UGC NET Result: வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்; எத்தனை பேர் பாஸ்? கட் ஆஃப் எவ்ளோ? காண்பது எப்படி?
UGC NET Result: வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்; எத்தனை பேர் பாஸ்? கட் ஆஃப் எவ்ளோ? காண்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
UGC NET Result: வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்; எத்தனை பேர் பாஸ்? கட் ஆஃப் எவ்ளோ? காண்பது எப்படி?
UGC NET Result: வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்; எத்தனை பேர் பாஸ்? கட் ஆஃப் எவ்ளோ? காண்பது எப்படி?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Kilambakkam railway station : இன்னும் 2 மாதம் தான்... கிளாம்பாக்கம் ரயில் நிலையம், நடைமேம்பாலம் திறக்கப்படும்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
கிளாம்பாக்கம் ரயில் நிலையமும், பேருந்து நிலைய நடைமேம்பாலமும் எப்போது திறக்கப்படும்-அரசு அசத்தல் அறிவிப்பு
Gold Rate Today: தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கே இவ்வளவா.? வெள்ளியின் விலையும் திடீர் சரிவு
தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கே இவ்வளவா.? வெள்ளியின் விலையும் திடீர் சரிவு
Top 10 News Headlines: மோடி & அமித் ஷா தமிழகம் வருகை, அடங்காத நாடாளுமன்றம், WPL ஃபைனல் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மோடி & அமித் ஷா தமிழகம் வருகை, அடங்காத நாடாளுமன்றம், WPL ஃபைனல் - 11 மணி வரை இன்று
Embed widget