மேலும் அறிய

CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை

விடைத்தாள் திருத்தப் பணிகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து சுயாதீன விசாரணைக் குழு அமைக்க வேண்டும்- ராமதாஸ்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப் பணியில் வெளிப்படைத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் முழுமையான விசாரணை அவசியம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணியை தனியார் நிறுவனமான கேம்பெட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல்கள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், ஒரு மாணவர் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் தரவுகள் மற்றும் ஆவணங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

குறிப்பாக, விடைத்தாள் திருத்தும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட்டதா, தகுதியான ஆசிரியர்கள் போதுமான அளவில் ஈடுபடுத்தப்பட்டார்களா, மதிப்பெண் வழங்கலில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பிழைகள் ஏற்பட்டுள்ளனவா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நிர்வாக குறைபாடு இல்லை

நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்கும் நிலையில், மதிப்பீட்டு செயல்முறையில் ஏற்படும் சிறிய தவறுகூட ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும், எதிர்கால கனவுகளையும் பாதிக்கக்கூடியதாகும். எனவே, இந்த விவகாரத்தை சாதாரண நிர்வாக குறைபாடாக கருதாமல், மாணவர்களின் கல்வி உரிமையுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினையாக அணுக வேண்டும்.

கல்வி என்பது வணிகம் அல்ல; மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பான சமூகப் பணியாகும். எனவே, விடைத்தாள் திருத்தம் போன்ற முக்கிய பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும்போது கடுமையான கண்காணிப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கேம்பெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். விடைத்தாள் திருத்தப் பணிகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து சுயாதீன விசாரணைக் குழு அமைக்க வேண்டும். மாணவர் வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மதிப்பீட்டு செயல்முறையில் பிழைகள் கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சந்தேகங்கள் எழாத வகையில் வெளிப்படையான மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாணவர்களின் உழைப்பும் எதிர்காலமும் எந்தவித நிர்வாக அலட்சியத்திற்கும் அல்லது சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளுக்கும் பலியாகக் கூடாது. உண்மைகள் எதுவாக இருந்தாலும் அவை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். மாணவர்களின் நலனையும் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தில் முழுமையான, நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே கல்வி சமூகத்தின் ஒருமித்த கோரிக்கையாகும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget