மேலும் அறிய

NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ

முறையான விரிவான முன்னேற்பாடுகளுடன் 2027 ஆம் ஆண்டில் கணினி வழித் தேர்வை அறிமுகப்படுத்த என்.டி.ஏ திட்டமிட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் தேசிய தேர்வு முகமை முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வு விதிகளில் மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை தேசிய தேர்வு முகமை தற்போது கொண்டு வர உள்ளது. அதன்படி, வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு முற்றிலும் கணினி வழியில் (Computer Based Test) கண்டிப்பாக நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் என்.டி.ஏ அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பேனா, காகித முறைத் தேர்வில் மோசடி

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இந்த ஆண்டுவரை நீட் தேர்வு காகிதம் மற்றும் பேனா முறையில் ஓ.எம்.ஆர் தாள்களைப் பயன்படுத்தியே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளும் தொடர் மாணவர் போராட்டங்களும் வெடித்தன. கருணை மதிப்பெண் குளறுபடியும் கடந்த ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது.

உயர்மட்டக் குழு அமைப்பு

இந்த நிலையில் இந்த முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இதில் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் தேவையற்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க மத்திய கல்வி அமைச்சகம் ஒரு சிறப்பு உயர்மட்டக் குழுவை அமைத்திருந்தது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். 

இந்தக் குழுவின் முக்கிய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, நீட் தேர்வை கணினி முறைக்கு மாற்ற என்டிஏ அதிரடி முடிவு எடுத்துள்ளது. கணினி வழியில் தேர்வை நடத்துவதன் மூலம் வினாத்தாள் கசிவை நூறு சதவீதம் உறுதியாகத் தடுக்க முடியும் என்றும், தேர்வு முடிவுகளை மிக விரைவாகவும் எந்தவித பிழைகள் இல்லாமலும் சரியாக வெளியிட முடியும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அடுத்த ஆண்டு முதல்.. 

இருப்பினும், இந்த புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்தினால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் நடைமுறைச் சிரமம் ஏற்படும் என்பதால், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வும் கணினிப் பயிற்சியும் வழங்க சிறிது கால அவகாசம் கட்டாயம் தேவைப்படுகிறது.

எனவே, முறையான விரிவான முன்னேற்பாடுகளுடன் 2027 ஆம் ஆண்டில் கணினி வழித் தேர்வை அறிமுகப்படுத்த என்.டி.ஏ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் முன்னிலையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Embed widget